வாரணாசியை சேர்ந்த மாநகராட்சி தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் சந்தித்து உரையாடினார.
வாரணாசி நகரத்தை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற மாநகராட்சி தலைவர்களை அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரிய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும், மாநகராட்சி தலைவர்கள் தங்களது வார்டுகளை தூய்மையாக வைத்திருக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.
வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த கிராம தலைவர்கள் மற்றும் மாநகராட்சி தலைவர்களுடன் பிரதமர் மேற்கொண்ட ஐந்து நாள் உரையாடல் இன்றோடு முடிவடைந்தது.