Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் பிரதமர் துளசி மானஸ் கோவிலுக்கும் துர்கா மாதா கோவிலுக்கும் சென்றார்; ராமாயணம் குறித்த அஞ்சல் தலையை வெளியிட்டார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாரணாசி பயணத்தின் போது அங்குள்ள சரித்திரப் புகழ்மிக்க துளசி மானஸ் கோவிலுக்கு இன்று மாலை சென்றார். ராமாயணத்தை குறிக்கும் அஞ்சல் தலையை அவர் நிகழ்ச்சியின்போது வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், துளசி மானஸ் கோவிலின் வளாகத்தில் ராமாயண கருவில் அஞ்சல் தலை வெளியிடப்படுவதாக சொன்னார். சமுதாயத்தில் அஞ்சல் தலைக்கு முக்கிய இடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நமது வரலாற்றை பாதுகாப்பதற்கு இது ஒரு அற்புதமான வழி என்றும் அவர் கூறினார். ராமபிரானின் வாழ்க்கை மற்றும் லட்சியங்கள் ஒவ்வொருவரையும் தூண்டுவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் பின்னர் துர்கா மாதா கோவிலுக்கும் துர்கா கோவில் குளத்திற்கும் சென்றார்.