Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் பிரதமர் புற்றுநோய் மையத்திற்கான சிறப்பு மருத்துவமனை பிரதமர் அடிக்கல் நாட்டினார் புதிய வர்த்தக உதவி மையம் மற்றும் கைவினைப்பொருள் அருங்காட்சியகம்-பிரதமர் துவக்கி வைத்தார்.

வாரணாசியில் பிரதமர்
புற்றுநோய் மையத்திற்கான சிறப்பு மருத்துவமனை பிரதமர் அடிக்கல் நாட்டினார்
புதிய வர்த்தக உதவி மையம் மற்றும் கைவினைப்பொருள் அருங்காட்சியகம்-பிரதமர் துவக்கி வைத்தார்.

வாரணாசியில் பிரதமர்
புற்றுநோய் மையத்திற்கான சிறப்பு மருத்துவமனை பிரதமர் அடிக்கல் நாட்டினார்
புதிய வர்த்தக உதவி மையம் மற்றும் கைவினைப்பொருள் அருங்காட்சியகம்-பிரதமர் துவக்கி வைத்தார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையத்திற்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “மருத்துவ அறிவியலில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்துவருகிறது. இந்தியாவில் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்திய மக்களுக்கு, முக்கியமாக ஏழை மக்களுக்கு தரமான மற்றும் சமாளிக்கக்கூடிய சுகாதார வசதிகளை வழங்குவதே அவசர தேவையாகும்.

125 இந்திய மக்களின் வலிமை மீது எனக் நம்பிக்கை உள்ளது. அனைத்து இந்திய மக்களும் சுயநலமற்றவர்கள். மக்களின் ஆசீர்வாதம், ஆண்டவனின் ஆசீர்வாதம் ஆகும் என்று பிரதமர் கூறினார்.

இளைஞர்கள் இணையவழி வங்கி முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

வாரணாசியில் உள்ள கபீர் நகருக்குச் சென்ற பிரதமர், ஒருங்கிணைந்த மின் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய நகர வளர்ச்சி மற்றும் பெருக்குதல் திட்டத்தின் கீழ் பூமிக்கடியில் கேபிள்கள் பதித்தல் மற்றும் பாரம்பரிய விளக்கு அமைத்தல் பணிகளைப் பார்வையிட்டார்.

அதன் பிறகு, டி.எல்.டபுள்யூ மைதானத்தில் ஈ.எஸ்.ஐ.சி. சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர், புதிய வர்த்தக வசதி மையம் மற்றும் கைவினை அருங்காட்சியகத்தையும் துவக்கி வைத்தார்.