Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் சமாஜிக் அதிகரிதா ஷிவிர் நிகழ்ச்சியில் உதவிப் பொருட்களை பிரதமர் வழங்கினார். மகாமானா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாரணாசியில் சமாஜிக் அதிகரிதா ஷிவிர் நிகழ்ச்சியில் உதவிப் பொருட்களை பிரதமர் வழங்கினார்.    மகாமானா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாரணாசியில் சமாஜிக் அதிகரிதா ஷிவிர் நிகழ்ச்சியில் உதவிப் பொருட்களை பிரதமர் வழங்கினார்.    மகாமானா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று, சமாஜிக் அதிகரிதா ஷிவிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிப் பொருட்களை வழங்கினார்.

தையல் இயந்திரங்கள், பிரெய்லி பொருட்கள், காது கேட்கும் கருவிகள், நடக்க உதவும் கருவிகள் மற்றும் இதர பொருட்களை பிரதமர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் இதில் பலன் பெற்றனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஏழைகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்காகவும், இந்த அரசு சேவை செய்யும் என்று தான் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாகவே பேசியதை நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

வாரணாசியில் நடைபெறும் இந்த முகாம், இந்தியா முழுக்க நடந்த 1800 முகாம்களில் ஒன்று என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு முன் உள்ள அரசுகள் நடத்திய முகாம்களோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறினார் பிரதமர். உதவிப் பொருட்கள் வழங்குவதில், இடைத்தரகர்கள் இருந்ததை இத்தகைய முகாம்கள் அடியோடு ஒழித்துள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

இடைத்தரகர்களை ஒழித்து, அரசு நிர்வாகத்தை செம்மைப் படுத்தியதற்காக தன் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இத்தகைய தாக்குதல்கள் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உதவும் பாதையிலிருந்து தன்னை மாற வைக்காது என்றார் பிரதமர்,

மாற்றுத்திறனாளிகளை குறிக்கும் “விக்லாங்” என்ற வார்த்தைக்கு பதிலாக “திவ்யாங்” என்ற வார்த்தையை மாற்றியது குறித்து பிரதமர் கூறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை விட, அவர்களிடம் உள்ள புதிய திறமைகளைப் பற்றியே பார்வை இருக்க வேண்டும் என்றார் பிரதமர். மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக மத்திய அரசின் திட்டமான “சுகாம்யா பாரத் திட்டம்” பற்றி பிரதமர் எடுத்துக் கூறினார்.

பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய மகானாமா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், ரயில்வே நிர்வாகத்தைப் பாராட்டினார்.

அந்நிகழ்ச்சிக்கு பேருந்தில் வருகை தருகையில் விபத்தை சந்தித்தவர்கள் குறித்து பிரதமர் பேசினார். அதிகாரிகளும் அமைச்சர்களும், மருத்துவமனைக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களைக் கவனித்துக் கொண்டதாக தெரிவித்தார். சிறிய காயங்களோடு அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

***