வாடிகன் நகரில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையின் சந்திப்பு அறையில் பிரதமர் திரு நரேந்திர மோடியை போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் இன்று (அக்டோபர் 30ம் தேதி) வரவேற்றார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இந்தியப் பிரதமர் மற்றும் போப் ஆண்டவர் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இது. கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம், மறைந்த பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய், வாடிகன் சென்று அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பாலை சந்தித்தார். இந்தியா மற்றும் வாடிகன் இடையே, கடந்த 1948ம் ஆண்டு முதல் தூதரக உறவு நிலவுகிறது. கத்தோலிக்க மக்கள் அதிகமாக வசிக்கும் இரண்டாவது பெரிய ஆசிய நாடு இந்தியா.
இன்றைய சந்திப்பில், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதன் பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். பருநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது அதேபோல் ஒரு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தியது போன்றவற்றில் இந்தியா மேற்கொண்ட லட்சிய நடவடிக்கைகளை போப் ஆண்டவரிடம் பிரதமர் விளக்கினார். பெருந்தொற்று நேரத்தில் தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா அளித்த உதவியை போப் ஆண்டவர் பாராட்டினார்.
போப் பிரான்ஸிஸ் இந்தியா வர, பிரதமர் அழைப்பு விடுத்தார். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வாடிகன் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்டினல் பீட்ரோ பரோலினையும் பிரதமர் சந்தித்தார்.
***
At the Vatican City, PM @narendramodi had a meeting with Pope Francis. @Pontifex pic.twitter.com/o9OobfIBkL
— PMO India (@PMOIndia) October 30, 2021
Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India. @Pontifex pic.twitter.com/QP0If1uJAC
— Narendra Modi (@narendramodi) October 30, 2021