Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாகிஷ் சாஸ்திரி என்று அறியப்படும் பிரபல சமஸ்கிருத இலக்கண அறிஞர் பேராசிரியர் பாகீரத் பிரசாத் திரிபாதி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


வாகிஷ் சாஸ்திரி என்று அறியப்படும் பிரபல சமஸ்கிருத இலக்கண அறிஞர் பேராசிரியர் பாகீரத் பிரசாத் திரிபாதி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“நவீன விஞ்ஞான வழிமுறைகளைப் பயன்படுத்தி இளைஞர்களிடையே சமஸ்கிருத மொழியைப் பிரபலப்படுத்தியதில் ‘வாகிஷ் சாஸ்திரி’ என்ற பேராசிரியர் பாகீரத் பிரசாத் திரிபாதி விலைமதிப்பில்லாத பங்களிப்பை வழங்கினார். அவர் மிகுந்த அறிவாளியாகவும், நல்ல கல்வி ஞானம் உள்ளவராகவும் இருந்தார். அவரது மறைவினால் மிகுந்த கவலையுற்றேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1824572)