Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வருடன் உயர்நிலைக் குழு கூட்டம்.

வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வருடன் உயர்நிலைக் குழு கூட்டம்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்நிலைக் குழு கூட்டத்தை சீராய்வு செய்தார். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு.அகிலேஷ் யாதவ் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த சீராய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், வறட்சியால் மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு காண வேண்டும் என்றார். வறட்சி தடுப்பு பணிகளுக்கு நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.

நவீன தொழில்நுட்பங்களான தொலையுணர்வு மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்களை கொண்டு நீர் சேமிப்பு, நீர்செறிவூட்டல் கட்டமைப்பு திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அறுவடை முறைகளையும் அறிவியல் ஆலோசனைப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்றும், சொட்டுநீர் மற்றும் நீர்தெளிப்பு பாசன முறையை கையாள வேண்டும் என்றும், நீர் பயன்பாட்டை சீரிய முறையிலானதாக ஆக்க உரப்பாசன முறையை மேற்கொள்ள வேண்டும், சமுதாய பங்களிப்பு, குறிப்பாக நீர் சிக்கனத்தில் மகளிரை ஈடுபடுத்துதல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் வெளியாகும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை, அண்டைப்பகுதிகளில் விவசாயத்துக்கு பயன்படுத்தவும் பிரதமர் அழைப்பு விடுத்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை விநியோகிக்கும்போது, அதை ஜி.பி.எஸ். போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும் பருவமழைக்கு முன்னதாக, தற்போதுள்ள காலக்கட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் நடவடிக்கைகளை சீரிய முறையில் எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தூர்வாருதல், ஆறுகளை செறிவூட்டுதல், தடுப்பு அணைகள் மற்றும் இதர நீர் சேமிப்பு மேலாண்மை விஷயங்களும் இதில் அடக்கம்.

வறட்சி நிலையால் மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்னைகள் தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நவடிக்கைகள் குறித்து, பிரதமரிடம், முதல்வர் விளக்கினார். குடிநீர் விநியோகம், புந்தேல்காண்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், வேலைவாய்ப்பு, கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனம், பிரச்சினைக்கான நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள் ஆகியவையும் இதில் அடக்கம். மேலும் முதல்வர் கூறுகையில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை உரிய காலத்தில் செயல்படுத்துவது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஏரி, குளம், விவசாயக் குளங்கள், ஒரு லட்சம் புதிய நீர்நிலைகள் மற்றும் நீர்செறிவூட்டல் கட்டமைப்புகள் உள்ளிட்ட 78,000 நீர்நிலைக்களுக்கு புத்துணர்வு அளித்தல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பான செயல் திட்டத்தை மாநில அரசு பகிர்ந்து கொண்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம் மற்றும் பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசின் நிலுவை சரிசெய்தலை தொடர்ந்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலத்துக்கு ரூ.934.32 கோடி விடுவிக்கப்பட்டது. 2015-16ம் ஆண்டுக்கு மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு (எஸ்.டி.ஆர்.எப்.) மத்திய அரசின் பங்காக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இது ரூ.506.25 கோடி அதிகமாகும். மேலும், எஸ்டிஆர்எப்புக்கு 2016-17ம் ஆண்டுக்கான முதல்கட்ட தவணையாக ரூ.265.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 மே 2016ல் மாநில அரசு அனுப்பிய புதிய நினைவூட்டல் கடிதத்தில் 2015-16ம் ராபி பருவத்துக்கான நிதியுதவி கோரப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் முழுமையடைந்துள்ள நிலையில், நிதியுதவியை எந்த தாமதமும் இன்றி வழங்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

புந்தேல்காண்ட் உதவித் திட்டத்தின் கீழ், நிதியுதவி ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தரப்பில் மேற்கோள் காட்டப்பட்டது.

இந்த கூட்டம் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய தீர்வுகளுடன் இக்கூட்டம் முடிவடைந்தது.