Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி

வணக்கம்!

வங்கதேச மக்களின் `தேசப் பிதா’ வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழா கொண்டாட்ட சமயத்தில் வங்கதேச மக்கள் அனைவருக்கும் 130 கோடி இந்திய சகோதர சகோதரிகளின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஷேக் ஹசீனா தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. பின்னர் ஹசீனா அவர்களே தெரிவித்த யோசனையின்படி, இப்போது விடியோ தொடர்பு மூலம் உங்களுடன் நான் இணைந்திருக்கிறேன்.

நண்பர்களே, வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த நூற்றாண்டின் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் நம் அனைவருக்கும் அபரிமிதமான உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது.

வங்கபந்து என்றால் —

தைரியமான ஒரு தலைவர்

உறுதிப்பாடு கொண்ட ஒரு நபர்

அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு துறவி

நீதி, சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்

மூர்க்கத்தனத்துக்கு எதிரான எதிர்ப்புக் கை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான கேடயம் என்று அர்த்தமாகிறது.

அவருடைய இந்த அனைத்து குணங்களும், அந்தக் காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்தது. வங்கதேசத்தின் விடுதலைக்காக அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்தியது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் கண்ட கனவான `ஷோனார் பங்க்ளா’ – வை உருவாக்கும் பாதையில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் வங்கதேச மக்கள் அர்ப்பணிப்புடன் இன்றைய காலக்கட்டத்தில் உழைப்பதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நண்பர்களே! வங்கபந்துவின் வாழ்க்கை, 21வது நூற்றாண்டின் உலகத்துக்கு மகத்தான செய்தியை அளிப்பதாக இருந்துள்ளது. அடக்குமுறை மற்றும் கொடூரமான ஆட்சியாளர்களால், அனைத்து ஜனநாயக மாண்புகளும் மீறப்பட்டு `வங்காள பூமியின்’ மீது மிகுந்த அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டது, அந்த மக்கள் எப்படி பேரழிவுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை நாம் எல்லோரும் நன்றாக அறிந்திருக்கிறோம்.

வங்கதேச மக்களை பேரழிவு மற்றும் கொத்து கொத்தாகக் கொல்லப்படும் நிலையில் இருந்து மீட்டு, ஆக்க சக்திகளைத் திரட்டி சமுதாய முன்னேற்றத்துக்கு அதைப் பயன்படுத்துவதில், தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் செலவிட்டார். எந்தவொரு நாட்டிலும் வெறுப்புணர்வும் எதிர்மறை சிந்தனையும் வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்க இயலாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார்.

இருந்தபோதிலும், அவருடைய இந்த சிந்தனைகள் சிலருக்குப் பிடிக்காமல் போனதால் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டார்கள். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஷேக் ரெஹானா ஆகியோருக்கு இறைவனின் ஆசிகள் இருப்பது நமக்கு அதிர்ஷ்டமான விஷயம். இல்லாவிட்டால், வன்முறை மற்றும் வெறுப்புணர்களில் நம்பிக்கை கொண்டவர்கள், குழப்பம் ஏற்படுத்த எதையும் செய்வதற்குத் துணிந்திருப்பார்கள்.

அரசியலில் வன்முறையும் பயங்கவரவாதமும் எப்படி ஆயுதங்களாக செயல்படுகின்றன என்பதையும், சமூகம் மற்றும் தேசத்தை சூதுச் செயல்கள் எப்படி சீரழிக்கின்றன என்பதையும் நாம் எல்லோரும் பார்த்து வருகிறோம். பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு இப்போது யார் புகலிடம் கொடுக்கிறார்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. வங்கதேசம் புதிய உச்சங்களைத் தொடும் நிலையில், அவ்வாறு புகலிடம் கொடுப்பவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, வங்கபந்துவால் உத்வேகம் பெற்றும், ஷேக் ஹசீனாவின் தலைமையின் கீழும் வங்கதேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பங்கேற்புடன் கூடிய மற்றும் வளர்ச்சி நோக்கிலான கொள்கைகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.

பொருளாதாரமாக இருந்தாலும், மற்ற சமூகக் குறியீடுகள் அல்லது விளையாட்டுத் துறையாக இருந்தாலும், இப்போது வங்கதேசம் புதிய தடங்களை உருவாக்கி வருகிறது. தொழில் திறன், கல்வி, சுகாதாரம், மகளிருக்கு அதிகாரம் அளித்தல், நுண்கடன் போன்ற பல துறைகளில் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை வங்கதேசம் பெற்று வருகிறது.

கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் இந்தியாவும், வங்கதேசமும் பொன்னான அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன என்று குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நமது பங்களிப்பு நிலையில் புதிய பரிமாணம் ஏற்பட்டு, புதிய பாதை உருவாகி இருக்கிறது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம். நில எல்லை மற்றும் கடல் எல்லை போன்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு இதன் காரணமாகத்தான் நம்மால் சுமுகத் தீர்வை எட்ட முடிந்தது.

தெற்காசியாவில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராக பங்களாதேஷ் இருப்பதுடன் மட்டுமின்றி, வளர்ச்சியிலும் பங்காளராக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால், பங்களாதேஷில் லட்சக்கணக்காண வீடுகளில் மின்விளக்குகள் எரிகின்றன, தொழிற்சாலைகள் இயங்குகின்றன. நட்புணர்வு என்ற குழாய்பாதை மூலமாக, நமது உறவுகளில் புதிய பரிமாணம் ஏற்பட்டிருக்கிறது.
சாலை, ரயில், விமானம் அல்லது நீர்வழி ஏதுவாக இருந்தாலும் அல்லது இன்டர்நெட்டாக இருந்தாலும், நம் இரு நாடுகளின் மக்களுக்கு இடையில் பல்வேறு துறைகளில் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் நம் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்து வருகிறது.

நண்பர்களே, தாகூர், குவாஜி நஸ்ருல் இஸ்லாம், உஸ்தாத் அலாவுதீன் கான், லலோன் ஷோ, ஜீபானந்த தாஸ், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற அறிவுஜீவிகளிடம் இருந்து நம்முடைய பாரம்பரியம் உருவாகியுள்ளது.

வங்கபந்துவின் மரபு மற்றும் உத்வேகம் காரணமாக, நமது பாரம்பரியம் பல விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. சித்தாந்தங்கள் மற்றும் மாண்புகளுக்கு இந்தியா எப்போதும் மதிப்பளித்து வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையில் ஆழமான உறவுகள் இருப்பதால், பாரம்பரியப் பகிர்தலில் வலுவான அடித்தளம் உருவாகியுள்ளது.

நம்முடைய இந்தப் பாரம்பரியம், ஆழமாக வேரூன்றியுள்ள பிணைப்பு, வங்கபந்து காட்டியுள்ள பாதை ஆகியவை பங்களிப்பு, முன்னேற்றம், வளமை ஆகியவற்றில் இந்த தசாப்தத்திலும் இரு நாடுகளுக்கு இடையில் வலுவான உறவுகள் நீடிக்க, உதவியாக இருக்கின்றன.

அடுத்த ஆண்டு, பங்களாதேஷ் விடுதலை பெற்று 50 ஆண்டு நிறைவுபெறும் ஆண்டாக இருக்கப் போகிறது. 2022 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த இரு முக்கிய தருணங்களும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வதாக மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதாகவும் அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

மீண்டும் ஒரு முறை, வங்கபந்து நூற்றாண்டை ஒட்டி வங்கதேச மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் பங்க்ளா, ஜெய் ஹிந்த்!!