Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லே அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


லே அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திரமோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

 

எக்ஸ் பதிவு ஒன்றில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

லே அருகே ஏற்பட்ட விபத்தில்  இந்திய ராணுவ வீரர்களை நாம் இழந்திருப்பது வலியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கான அவர்களின் சிறந்த சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிர்நீத்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். PM @narendramodi”

*****

(Release ID: 1950548)

 

AP/SMB/KRS