பிரதமர் லண்டனில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி பிரிவினை பார்வையிட்டார்.
லண்டன் லம்பெத்தில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பசவேஸ்வரர் சிலையை திறந்துவைத்தார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நேற்று பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலினால் மிக மனவருத்ததோடு இருக்கிறேன். இந்த தாக்குதல் பிரான்ஸ் மக்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல, இது மனிதத்தன்மைக்கு எதிரான தாக்குதல். உலகிற்கு வந்திருக்கும் எந்த பேராபத்தை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் என்ற சொல்லிற்கு முடிவுக்கட்ட வேண்டிய கட்டாயம் ஐக்கிய நாடுகளுக்கு உள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பசவேஸ்வரர் ஒரு பெரிய தத்துவ மேதையும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். அவர் காலத்தில் இருந்த அனைத்து சமூக தீயசக்திகளையும் எதிர்த்து போராடினார். மேலும், அவர் ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்த போராடினார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
லண்டனின் கிங் ஹென்றி சாலையில் டாக்டர். அம்பேத்கர் நினைவகத்தை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். இந்த நினைவகத்திற்காக பொருத்தப்பட்டிருக்கும் பெயர்பலகையை பிரதமர் திறந்துவைத்தார். அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் பிரதமர் “டாக்டர். அம்பேத்கர் தனக்கு முன் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து தடைகளையும் சோதனைகளையும் தகர்த்தெறிந்து தனது அறிவு தாகத்தை தீர்த்துக்கொண்ட புனிதமான இடம் இது” என்று எழுதினார். சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைத்த இந்த மாமனிதருக்கு நான் தலை வணங்குகிறேன், என்று பிரதமர் கூறினார்.
சொளிஹுல்லில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி பிரிவினை பிரதமர் பார்வையிட்டார்.
Remembering an icon of social reform & democratic ideals...PM unveils Basaveshwara Statue in London. pic.twitter.com/p9dTOma0fj
— PMO India (@PMOIndia) November 14, 2015
This statue will be an inspiration for all those who believe in democratic ideals: PM @narendramodi at Basaveshwara statue unveiling
— PMO India (@PMOIndia) November 14, 2015
At the house where Dr. Ambedkar lived during his stay in London...PM @narendramodi & Maharashtra CM @Dev_Fadnavis. pic.twitter.com/0PSjOPGih9
— PMO India (@PMOIndia) November 14, 2015
More pictures from King Henry's Road, London. @Dev_Fadnavis @CMOMaharashtra pic.twitter.com/sXypM4s4wM
— PMO India (@PMOIndia) November 14, 2015
PM @narendramodi with Maharashtra CM @Dev_Fadnavis at the house where Dr. Ambedkar stayed while he was in London. pic.twitter.com/tgdLW7JJgU
— PMO India (@PMOIndia) November 14, 2015
Just visited the house where Dr. Ambedkar stayed. His message of equality & justice continues to resonate. pic.twitter.com/DkgaOUGo4I
— Narendra Modi (@narendramodi) November 14, 2015