லட்சத்தீவில் ‘ஊட்டச்சத்து தோட்ட திட்டத்தை’ பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். லட்சத்தீவு மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இந்த முயற்சி காட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் தற்சார்பு என்னும் வளர்ச்சி நோக்கத்தின் பயனாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், 1000 விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.
மேலும், லட்சத்தீவில், கொல்லைப்புறக் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.600க்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு 7000 நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன.
லட்சத்தீவு ஆளுநரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் கூறியிருப்பதாவது;
“பாராட்டத்தக்க முயற்சி, சிறந்த முடிவு! இந்த முயற்சி லட்சத்தீவு மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது’’.
***
SM/PKV/DL
सराहनीय प्रयास, बेहतरीन परिणाम! इस पहल ने दिखाया है कि लक्षद्वीप के लोग नई चीजें सीखने और अपनाने को लेकर कितने उत्साहित रहते हैं। https://t.co/5UFl57RtjK
— Narendra Modi (@narendramodi) June 10, 2023