Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்

லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள்  தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்


லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.01.2024) தலைமை வகித்தார். பிரதமர் மோடி இன்று லட்சத்தீவு சென்றடைந்தார். நாளை (03.01.2024) அவர்  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

“லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தேன். உள்கட்டமைப்பை  மேம்படுத்துவது, உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மற்றும் மக்களுக்குச் செழிப்பான வாழ்க்கையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் லட்சத்தீவு மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை  அமைத்துத் தருவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது”.

***

(Release ID: 1992551)

ANU/PKV/PLM/KPG/RR