பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்திற்கு ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்புத் திட்டம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை மேலும் வலுவாக்கும். அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கத்திற்கிணங்க, யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தீர்வுகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து வலுவாக்க இந்த திட்டம் உதவும்.
***
TV/PLM/RS/RJ
India's strides in digital payments will be further strengthened by today's Cabinet decision regarding promotion of RuPay Debit Cards and BHIM-UPI transactions. https://t.co/IoBL59gDU8
— Narendra Modi (@narendramodi) January 11, 2023