Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராமேஸ்வரத்தில் பிரதம மந்திரி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்துவைத்தார்

ராமேஸ்வரத்தில் பிரதம மந்திரி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்துவைத்தார்

ராமேஸ்வரத்தில் பிரதம மந்திரி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்துவைத்தார்

ராமேஸ்வரத்தில் பிரதம மந்திரி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தைத் திறந்துவைத்தார்



கலாம் சந்தேஷ் வாஹினி கண்காட்சி பேருந்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

ராமேஸ்வரம் – அயோத்தி இடையிலான ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்து, இதர நலத் திட்டங்களை வழங்கினார்

பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை ஆற்றினார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை இன்று திறந்துவைத்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள டாக்டர் கலாம் உருவச் சிலையைத் திறந்துவைத்து, அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார். டாக்டர் அப்துல் கலாமின் குடும்பத்தினருடன் அவர் சிறிது நேரம் உரையாடினார்.

அதையடுத்து, கலாம் சந்தேஷ் வாகனம் (Kalam Sandesh Vahini) எனப்படும் நடமாடும் கண்காட்சியின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த நடமாடும் கண்காட்சி வாகனம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயணம் செய்து, புதுத் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி சென்றடையும்.

இப்பணிகளைத் தொடங்கிவைத்த பின் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி “நீலப் புரட்சித் திட்டத்தின்” கீழ்ப் பெரிய இழுவைப் படகுகளுக்கான அனுமதிக் கடிதத்தை மீனவர்களுக்கு வழங்கினார்.

அதையடுத்து, ராமேஸ்வரத்துக்கும் அயோத்தி நகருக்கும் இடையில் “ஸ்ரத்தா சேது” என்ற எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தைக் காணொலிக் காட்சியின் மூலம் பிரதமர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, “பசுமை ராமேஸ்வரம் திட்டத்துக்கான” (Green Rameswaram Project) குறிப்புரையை அவர் வெளியிட்டார். இவற்றுடன், ராமேஸ்வரம் மாவட்டம் முகுந்தரையர் சத்திரம் முதல் அரிச்சல்முனை இடையில் 9.5 கி.மீ. நீளமான தேசிய நெடுஞ்சாலை (NH-87) நாட்டுக்கு அர்ப்பணித்து அதற்கான கல்வெட்டையும் திறந்துவைத்தார்.

பின்னர்ப் பொதுமக்களிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய சிறப்புரை:

“ராமேஸ்வரம் நாட்டுக்கே ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. தற்போது டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடத்தைக் கொண்டும் சிறப்பு பெறுகிறது.

டாக்டர் கலாம் ராமேஸ்வரம் நகரின் எளிமை, ஆழம், அமைதி ஆகியவற்றை வெளிப்படுத்தினார். டாக்டர் கலாமுக்காக அமைக்கப்பட்ட இந்த நினைவாலயம் அவரது வாழ்க்கையையும் அவரது காலத்தையும் காட்டுவதாகச் சிறந்த வகையில் அமைந்துள்ளது” என்றார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேசிய பிரதமர் “அவர் நமது நினைவில் நிற்கும் தலைவராகத் திகழ்கிறார். அவர் இப்போது இருந்திருந்தால், பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பார். தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்திருப்பார்” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் பேசுகையில், “துறைமுகங்கள், போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் இந்தியாவின் மேம்பாட்டுக்குப் பெரிய அளவுக்குப் பங்களிப்பு செலுத்தும். “தூய்மை இந்தியா” திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது” என்று கூறினார்.

“டாக்டர் கலாம் இந்தியாவின் இளைஞர்களுக்கு உந்துதலாக விளங்கினார். இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் வளர்ச்சியின் உயரத்தை எட்டவேண்டும் என்றும் வேலை உருவாக்குவோராகவும் இருக்க விரும்புகிறார்கள்” என்று பிரதமர் பேசினார்.

****