Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களின் அசாதாரண வீரம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிரதமர் வணக்கம் செலுத்தியுள்ளார்


ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களின் அசாதாரண வீரம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும்  தியாகங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வணக்கம்  செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ராணுவ தினத்தன்று, நமது ராணுவ வீரர்களின் அசாதாரண தைரியம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நாம்  போற்றுகிறோம். நமது தேசத்தைப் பாதுகாப்பதிலும், நமது இறையாண்மையை நிலைநிறுத்துவதிலும், அவர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் வீரத்திற்குச் சான்றாகும். வலிமை மற்றும் உறுதியின் தூண்களாக அவர்கள் விளங்குகிறார்கள்.”

*****

ANU/SMB/RB/DL