Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்


வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவுகூர்ந்துள்ளார். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை அவர் நடத்தினார் என்றும், ஈடுஇணையற்ற  துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

“வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை நடத்திய அவர், ஈடுஇணையற்ற  துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார். ஒடுக்குமுறைக்கு எதிராக துணிந்து நிற்கவும் விடுதலைக்காக போராடவும் பல தலைமுறையினருக்கும் அவர் உந்துசக்தியாக  விளங்கினார். மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான அவரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது”.

***

(Release ID: 2089742)

TS/SMB/RR/KR