Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி அருங்காட்சியை பிரதமர் தொடங்கிவைத்தார்


ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். மகாத்மா காந்தியின் வாழ்நாளில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த ஆல்ஃபிரெட் உயர்நிலை பள்ளியில் இந்த அருங்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. காந்தீய கலாச்சாரம், விழுமங்கள் மற்றும் தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் உதவியாக அமையும்.

624 வீடுகள் அடங்கிய பொது வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கும் வகையில் பிரதமர் கல்வெட்டை திறந்துவைத்தார். பிரதமரின் முன்னிலையில் 240 பயனாளி குடும்பங்கள் மின்னணு கிரக பிரவேசம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மகாத்மா காந்தி பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது என்று கூறினார். நமது தேசத்தந்தையுடன் மிகவும் நெருக்கம் கொண்ட நிலமாக உள்ளதால் குஜராத் மிகவும் பாக்கியம் செயதுள்ளது என்றார்.

சுற்றுச்சூழல் குறித்து மிகவும் கவலை கொண்டவர் நமது தேசத்தந்தை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் காந்தியடிகளின் ஊக்கத்தை கொண்டு நாம் சுத்தமான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வரிசையில் கடைசியில் உள்ள மனிதர்கள், ஏழைமக்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய மக்களையே என்றும் நினைத்தவர் நமது தேசத்தந்தை என்று பிரதமர் நினைவுறுத்தினார். இந்த கொள்கையினால் ஈர்க்கப்பட்டுதான் நாங்கள் ஏழைகளுக்கு சேவைபுரிகிறோம் என்றார் பிரதமர். எங்களது திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்ற முயல்கிறோம், அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டித் தர நினைக்கிறோம், என்று பிரதமர் கூறினார்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆனா பிறகும் தூய்மையான இந்தியா எனும் தேசத்தந்தையின் கனவு நிறைவேறாமல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் நாம் அனைவரும் ஒன்றிணைந்த இந்த கனவை நினைவாக்குவோம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கத்தில் நாம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளோம், ஆனால் இன்னும் செய்யவேண்டும் என்று பிரதமர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார்.