Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜாங்க மற்றும் அலுவல் ரீதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, விசா நடைமுறைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க மாதிரி ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ராஜாங்க மற்றும் அலுவல் ரீதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, விசா நடைமுறைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க மாதிரி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், விசா இல்லாமல் இந்தியாவுக்கு வருகை தந்து, 90 நாட்களோ அல்லது அதற்கு குறைவாகவோ, அதிகபட்சம் 180 நாட்களுக்கு மிகாமல், இந்தியாவிலோ, அல்லது இந்தியாவோடு ஒப்பந்தம் உள்ள நாடுகளிலோ, ராஜாங்க அல்லது அலுவல்ரீதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

ராஜாங்க அல்லது அலுவல் ரீதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 69 நாடுகளுடன் விசா இல்லாமல் பயணம் செய்ய இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. இன்னும் 130 நாடுகளுடன் இந்தியா இது போன்ற ஒப்பந்தங்களை செய்ய உள்ளது.

***