Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


ராஜஸ்தானின் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

“ராஜஸ்தானின் பரத்பூரில் ஏற்பட்ட சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குஜராத்திலிருந்து புனித யாத்திரை சென்று உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

“பரத்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண  நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 வழங்கப்படும்.

***