ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஏப்ரல் 12, 2023 அன்று, காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக்காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
முதற்கட்டமாக தொடக்க நாளில் ஜெய்ப்பூர்-தில்லி கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழக்கமான சேவை ஏப்ரல் 13 அன்று தொடங்கும். இந்த ரயில் அஜ்மீரிலிருந்து ஜெய்ப்பூர், ஆல்வர், குர்கான் வழியே தில்லி கண்ட்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.
தில்லி கண்ட்டோன்மென்ட்- அஜ்மீர் இடையேயான தொலைவினை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் அடையும். தற்போது இந்த வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி 15 நிமிடங்களில் சென்றடைகிறது.
புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை இந்த ரயில் இணைக்கும்.
***
AD/IR/RJ/KPG