Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள செயற்கைக்கோள் மையங்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்தின் அம்லாஹா பகுதியில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை ஐ.சி.ஏ.ஆர்.டி.ஏ. அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

(அ) ராஜஸ்தான் (இயற்கை வள மேலாண்மைக்கு), மேற்குவஙகத்தில் (பருப்பு வகைகளுக்கு) உள்ள செயற்கைக்கோள் மையங்களுடன் மத்தியப்பிரதேச மாநிலம், சேகூர், அம்லாஹா-வில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை (FLRP) இரண்டாவது கட்டமாக வறண்ட பகுதிகளில் வேளாண்மை ஆய்வுக்கான சர்வதேச மையம் (ICARDA) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
(ஆ) சேகூரின் அம்லாஹா பண்ணையில் உள்ள நிலத்தை (70.99 ஹெக்டேர்கள், 175.42 ஏக்கர்) மத்தியப் பிரதேச அரசு வழங்கும். இதற்காக ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.1 என்ற அடிப்படையில், 30 ஆண்டுகளுக்கு மத்தியப்பிரதேச அரசுடன் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இதனைத் தொடர்ந்து, மத்தியப்பிரதேசத்தில் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை (FLRP) ஏற்படுத்துவதற்காக இந்த நிலம், ICARDA-க்கு குத்தகைக்கு விடப்படும்.

(இ) ஐக்கிய நாடுகள் (உரிமைகள் மற்றும் சலுகைகள்) சட்டம் 1947-ன் 3-வது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, ICARDA-வின் உணவு தானியங்கள் ஆய்வு அமைப்புக்கு சர்வதேச அந்தஸ்து வழங்க கொள்கை அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

(ஈ) ஆய்வு அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசின் சார்பில் மேற்கொள்வதற்கு வேளாண் ஆய்வுத் துறைக்கு (DARE) அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
(உ) உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பை உருவாக்கும் விவகாரத்தில் ICAR மற்றும் ICARDA இடையே கையெழுத்தாகும் துணை ஒப்பந்தத்தில், தேவைப்பட்டால், தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய வேளாண் அமைச்சகத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

உணவு தானியங்களுக்கான ஆய்வு அமைப்பை இந்தியாவில் அமைப்பதன் மூலம், அதிகரித்துவரும் உணவு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் தலைசிறந்த சர்வதேச அறிவியல் திறனை இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ள முடியும். உணவு தானியங்கள் ஆய்வு அமைப்பு மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகளை இந்தியாவில் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேளாண் துறை ஆய்வில் உலகிலேயே மிகப்பெரும் மையமாக இந்தியாவை மிகப்பெரிய சர்வதேச ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மாற்றும். இதன்மூலம், நாட்டுக்கு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதலீடு மேலும் கிடைக்கும்.

இந்த ஆய்வு மையத்தை, சர்வதேச அமைப்பு ஏற்படுத்துகிறது. புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதிலும், வறண்ட நிலப் பகுதிகளுக்கு ஏற்ற உணவு தானிய வகைகளை உருவாக்கும் வானிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களிலும் சிறந்த அனுபவத்தை, வறண்ட பகுதிகளில் வேளாண்மை ஆய்வுக்கான சர்வதேச மையம் (ICARDA) கொண்டுள்ளது. நிலப்பகுதி அடிப்படையில், பயிறு மற்றும் கால்நடை உற்பத்தியை அதிகரிக்க, பல்துறை நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானிகள் குழு மூலமாக ICARDA ஆய்வு மேற்கொள்ளும். வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை அதிகரித்தல், இயற்கை வளங்கள் அமைப்பை நீடிக்கச் செய்தல் ஆகியவற்றுக்கு இந்த அமைப்பு, பங்களிப்பை செய்யும்.

இந்த ஆய்வின் முடிவுகளால், அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ள பெரிய, சிறு அல்லது குறு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த அமைப்பால் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தகுதி உள்ளது. இந்தத் திட்டம், அனைவருக்கும் சமமானது மற்றும் அனைவரையும் உள்ளடக்கியது.