Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


 

ராஜஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜஸ்தான் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த மாநிலம் தொடர்ந்து செழித்து வளரும் என்றும், சிறப்பான முன்னேற்றத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அற்புதமான துணிச்சல், வீரத்தின் அடையாளமான ராஜஸ்தானின் எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ராஜஸ்தான் தின வாழ்த்துக்கள். இந்த மாநிலம் வளர்ச்சியின் புதிய அளவுகோல்களை தொடர்ந்து உருவாக்கும். இங்குள்ள கடின உழைப்பாளிகள், திறமையானவர்களின் பங்களிப்புடன் நாட்டின் செழிப்புக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை இந்த மாநிலம் வழங்கட்டும். ”

***

PLM/KV