Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தானின் மங்கர் மலைப்பகுதியில் நடைபெற்ற மங்கர்தாமின் பெருமைக் கதை நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

ராஜஸ்தானின் மங்கர் மலைப்பகுதியில் நடைபெற்ற மங்கர்தாமின்  பெருமைக் கதை நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


வணக்கம்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், மங்கர் தாம் பகுதியில் நாம் அனைவரும் ஒன்றுகூடியிருப்பது, புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில், மங்கர் தாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர்  பிரிட்டிஷ்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த இடம், தங்கள் இன்னுயிரை ஈந்த பழங்குடியின மக்களின் தேசப்பற்றை பிரதிபலிப்பதாகக் கூறினார்.

நண்பர்களே,

சாலைகள் உருவாக்கப்பட்டு இந்த பகுதி வளர்ச்சி கண்டிருப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதியும்,சுதந்திரப் போராட்ட தியாகியுமான குரு கோவிந்-தின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நண்பர்களே,

நேற்றையை இந்தியா, இன்றைய இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவின் வரலாறு, பழங்குடியின சமூகத்தினர் இல்லாமல் முடிவு பெறாது என்றார் பிரதமர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின், அனைத்துப் பக்கங்களிலும் பழங்குடியின சமூகத்தினரின் வீரம் பொதிந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நாடு, பழங்குடியின சமூகத்தினரின் தியாகத்திற்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், அந்த சமூகம், இயற்கை, சுற்றுச்சூழல், கலாச்சாரம், பண்பாடு மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்தக் குணாதிசயத்தையும் பாதுகாத்திருக்கிறது என்றார்.  எனவே இந்த நாடு பழங்குடியின சமூகத்தினரின் உயரியப் பங்களிப்புக்கு நன்றிசொல்லவேண்டிய நேரம் இது. இந்த உத்வேகம்தான், கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமளித்தது என்று பிரதமர் கூறினார்.

இன்று முதல் அடுத்த சில நாட்களில், பக்வான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளான ஜன்ஜாதிய கவுரவ் திவஸ் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுதந்திரப்  போராட்ட பழங்குடியின வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அருங்காட்சிகயங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

சகோதர சகோதரிகளே,

பல்வேறு பழங்குடி சமூகத்தினருக்கு சேவை செய்ய மத்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழங்குடியினத்தவர்களுக்கு தண்ணீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக,  பழங்குடியினர் நல்வாழ்வுத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது வனப்பகுதிகள் மேம்படுத்தப் பட்டிருப்பதுடன்,  வனவளமும் பாதுகாக்கப்பட்டு, டிஜிட்டல் இந்தியாவிற்கு, பழங்குடியின மக்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

பழங்குடியின இளைய தலைமுறையினருக்கு திறன் மேம்பாட்டுடன் கூடிய நவீனகல்வி கிடைக்க ஏதுவாக, ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

நண்பர்களே,

அகமதாபாத்-உதய்பூர் ரயில் தடம் நேற்று முதல் அகலரயில்பாதையாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் ராஜ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர-சகோதரிகள் பெரிதும் பயன் பெறுவார்கள். மேலும் ராஜஸ்தானில் உள்ள பெரும்பாலான பழங்குடியின பகுதிகள், குஜராத்தின் பழங்குடியினப் பகுதிகளுடன் இணைக்கப்படுவதுடன், தொழில் வளர்ச்சிக்கும் வித்திடும். அதேநேரத்தில், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.

நண்பர்களே,

நாம் தற்போது  மங்கர்தாமின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அதற்கு, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குரு கோவிந்-தின் நினைவிடத்திற்கு, செல்ல ஏதுவாக, சாலைவழித்தடத்தை அமைக்க வேண்டும் என இந்த 4 மாநில அரசுகளையும் கேட்டக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.

***

SM/ES/IDS