Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தானின் அபு சாலையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாந்திவன் வளாகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்

ராஜஸ்தானின் அபு சாலையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாந்திவன் வளாகத்தைப் பிரதமர் பார்வையிட்டார்


ராஜஸ்தானின் அபு சாலையில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாந்திவன் வளாகத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அதன் அறக்கட்டளையின் அதிநவீன மருத்துவமனை, சிவமணி முதியோர் இல்லத்தின் இரண்டாம் பிரிவு மற்றும் செவிலியர் கல்லூரி விரிவாக்கப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளையும் பிரதமர் கண்டுகளித்தார்.

திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், பிரம்ம குமாரிகள் அமைப்பின் சாந்திவன் வளாகத்தை பார்வையிடும் வாய்ப்பு தமக்கு பலமுறை கிடைத்திருப்பதை நினைவுகூர்ந்ததுடன், தாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆன்மீக உணர்வுகள் வெளிப்படுகின்றன என்றார். பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருப்பது கடந்த சில மாதங்களில் இது இரண்டாவது முறை என்றார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் நீர்நிலைகளை உருவாக்கும் ஜல் ஜன் திட்டத்தை தொடங்கி வைக்க வாய்ப்பு கிடைத்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும் பிரம்ம குமாரிகள் அமைப்புடனான தனது தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், பரம்பிதாவின் ஆசீர்வாதத்தையும், ராஜ்ய யோகினி தாதிஜியின் பாசத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.

அறக்கட்டளையின் அதிநவீன  மருத்துவமனை, சிவமணி முதியோர் இல்லத்தின் இரண்டாம் பிரிவு மற்றும் செவிலியர் கல்லூரி விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் இந்தப் பணிகளுக்காக பிரம்மகுமாரிகள் அமைப்பை வெகுவாக பாராட்டினார்.

அமிர்த காலத்தில் அனைத்து சமூக மற்றும் மத நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்ற வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த அமிர்த காலம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமைக் காலமாக இருக்கும் என்றும் கூறினார். அதாவது நாம் நம்முடைய கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். மேலும் நம்முடைய எண்ணங்கள் மற்றும் பொறுப்புகள் நாடு மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், பிரம்ம குமாரிகள் அமைப்பு சமூகத்தின் தார்மீக மதிப்புகளை பலப்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அறிவியல், கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வை முன்னிறுத்துவதில் அந்த அமைப்பின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது என்று கூறிய பிரதமர், அதே நேரத்தில் சுகாதாரத்துறை இந்த அமைப்பின் அளப்பரிய பணிகளையும் வெகுவாக பாராட்டினார்.

 

சுகாதார வசதிகளில் நாடு முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவது ஆயுஷ்மான் பாரத்தின் பங்களிப்பு குறித்து விவரித்தார். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை பெறுவது என்பதல்லாமல்  தனியார் மருத்துவமனைகளிலும் ஏழைகள் சிகிச்சை பெற முடியும் என்று அவர் கூறினார். இத்திட்டத்தினால் ஏற்கனவே 4 கோடிக்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் பயனடைந்துள்ளதாகவும், அவர்களுடைய 80,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதே போல் மக்கள் மருந்தகம் திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க நோயாளிகளின் சுமார் 20,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரம்ம குமாரிகளை அவர் கேட்டு கொண்டார்.

நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை போக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். 2014 ஆண்டிற்கு முன்பு 150 மருத்துவக்கல்லூரிகளுக்கும் குறைவாகவே இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் அரசு 350-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளை தொடங்கியுள்ளதாக கூறினார். 2014-ம் ஆண்டிற்கு முன்பு மற்றும் அதன் பிறகு  என்று ஒப்பிட்டு பேசிய பிரதமர், ஆண்டுதோறும் 50,000 எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்புக்கான இடங்களே இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்கள் 30,000 லிருந்து 65,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நோக்கங்கள் எப்போதும் தெளிவாகவும், சமூக சேவை உணர்வுடனும் இருந்தால், அத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 70 ஆண்டுகளில் இருந்த மருத்துவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். செவிலியர் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாட்டில் 150க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரிகள் இருப்பதாகவும், 20க்கும் மேற்பட்ட  செவிலியர் கல்லூரிகள் ராஜஸ்தானில்  அமைக்கப்பட்டு அதன் மூலம் எதிர்காலத்தில் தொடங்கப்படவுள்ள அதிநவீன சிறப்பு அறக்கட்டளை சர்வதேச மருத்துவமனையும் பயனடையும் என்று கூறினார். இந்திய சமூகத்தில் மதம் மற்றும் ஆன்மிக அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் கல்விப்பணி குறித்து பிரதமர் கூறினார். இயற்கை பேரிடரின் போது பிரம்ம குமாரிகளின் பங்களிப்பு குறித்து அவர் நினைவுகூர்ந்தார். மனித சமுதாயத்திற்கான சேவையில் பிரம்ம குமாரிகள் சங்கம் ஆற்றிய பணி குறித்து தாம் உணர்ந்ததாக கூறினார்.  நீர் வள இயக்கம் போன்றவற்றை மக்கள் இயக்கங்களாக மாற்றியதற்கு பிரம்ம குமாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 தாம் எதிர்பார்ப்பதற்கு மேலாக எப்போதும் பிரம்ம குமாரிகள் அமைப்பு செயல்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவதும் விடுதலையின் அமிர்தப் பெருவிழா, யோகா முகாம் ஆகியவற்றை அவர்கள் ஏற்பாடு செய்ததை உதாரணமாகக் கூறினார்.  தூய்மை பாரதத்தின் தூதுவராக தீதி ஜான்கி திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். பிரம்ம குமாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் அந்த அமைப்பு குறித்த தமது நம்பிக்கையை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுதானியங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் முயற்சியால் சிறுதானியங்கள் உலகளவில் சென்றடைந்துள்ளதாக கூறினார். இயற்கை வேளாண்மை, நமது ஆறுகளை தூய்மைப்படுத்துதல், நிலத்தடி நீரை  பாதுகாத்தல் போன்ற இயக்கங்களை நாடு முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறினார். இவைகள் நமது மண்ணின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார்.  நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய பிரதமர், புதிய வழிமுறைகளில் நாட்டை கட்டமைப்பது தொடர்பாக  புதிய நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பிரம்ம குமாரிகளை பிரதமர் வலியுறுத்தினார். இம்முயற்சிகளில்  அவர்களுக்கு மேலும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அதன் மூலம்  நாடு மேலும் சேவையின் பலனை பெறும் என்றும் அவர் கூறினார்.  வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதன் மூலம் உலகின் நலனுக்காக சேவையாற்றுவோம் என்ற மந்திரத்தின் படி நாம் வாழ்வோம் என்று பிரதமர் தமது உரையை நிகழ்வு செய்தார்.

 

பின்னணி

பிரதமரின் சிறப்புக் கவனம் நாட்டின் ஆன்மிக பணிக்கு புத்துயிர் தந்து உத்வேகத்தை அளித்துள்ளது. பிரம்ம குமாரிகளின் சாந்திவன் வளாகத்திற்கு பிரதமர் செல்லவுள்ளார்.  அறக்கட்டளையின் அதிநவீன சிறப்பு சர்வதேச மருத்துவமனை, சிவமணி முதியோர் இல்லத்தின் 2-ம் பிரிவு, செவிலியர் கல்லூரியின் விரிவாக்கம் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். அறக்கட்டளையின் அதிநவீன சிறப்பு சர்வதேச மருத்துவமனை அபுசாலையில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். இம்மருத்துவமனை அப்பகுதியில் உள்ள ஏழை மற்றும் பழங்குடியினருக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளிக்கும்.

***

AD/ES/IR/RR/AG/KPG