Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்

ரஷ்ய மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்


ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 16 ஆளுநர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளையும் சேர்ந்த பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே நல்லுறவு வலுப்படுவது மிகவும் முக்கியமானது என்பதே தனது விருப்பம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 2001-ம் ஆண்டில் ரஷ்யாவின் அஸ்ட்ராகான் மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டதை மகிழ்ச்சியுடன் அவர் நினைவுகூர்ந்தார்.

அப்போது, தங்களது மாகாணங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே வர்த்தக வாய்ப்புகள் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஆளுநர்கள் எடுத்துரைத்தனர்.

இன்றைய கலந்துரையாடலில், அர்கான்ஜெல்ஸ், அஸ்ட்ராகான், இர்குட்ஸ்க், மாஸ்கோ, பிரிமோர்யே பகுதி, கல்மிகியா குடியரசு, டட்டர்ஸ்டான், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சகாலின், ஸ்வெர்ட்லோவ்ஸ்க், டோம்ஸ்க், துலா, உல்யானோவ்ஸ்க், கபரோவ்ஸ்கி கிராய், செல்யாபின்ஸ்க் மற்றும் யரோல்வாவ்ல் பிராந்தியங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் கலந்துகொண்டனர்.