Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமரை சந்தித்தார்

ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமரை சந்தித்தார்


ரஷ்ய துணைப் பிரதமர் திரு. டிமிட்ரி ரோகோஜின் புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான ஆணைய கூட்டத்தில் பங்கேற்க திரு. டிமிட்ரி ரோகோஜின் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இந்த கூட்டத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இணை தலைமை தாங்குகிறார்.

இந்தியா ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு ஒட்டுமொத்த அளவில் நேர்மறையான முன்னேற்றம் அடைந்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மனநிறைவு தெரிவித்தார், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தோற்றுவிக்கப்பட்டு இந்த ஆண்டு 70 வருடங்களை நிறைவு செய்வதைக் கொண்டாடும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை பிரதமர் பாராட்டினார்.

******