Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமருடன் சந்திப்பு

ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமருடன் சந்திப்பு


ரஷ்ய துணைப் பிரதமர் திரு டிமிட்ரி ரோகோஜின் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமருக்கு அதிபர் புதினின் வாழ்த்துகளை தெரிவித்த திரு டிமிட்ரி ரோகோஜின், இந்தியா ரஷ்யா இடையே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் வளர்ச்சி குறித்து விளக்கினார்.

ரஷ்யாவுடனான நட்பு, காலத்தை வென்ற, நம்பகமான நட்பாகும் என்று கூறிய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை புதினுடன் இணைந்து அர்ப்பணிப்புடனும் விரிவாக்கம் செய்து, வலுவாக்கம் செய்ய உறுதிபூண்டுள்ளோம் என்றார். ஜூன் மாதம் அதிபர் புதினை தாஷ்கண்ட்டில் சந்தித்ததையும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் காணொளி நிகழ்ச்சியிலும் சந்தித்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். அதிபர் புதினின் வருகையை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.