இந்தியா, ரஷ்யா நாடுகளின் தலைவர்களாகிய நாங்கள், எங்கள் இரு நாடுகளும் தூதரக உறவை தொடங்கி 70வது ஆண்டு கொண்டாட்டத்தை அனுசரிக்கும் இந்த நிலையில், இந்தியா & ரஷ்யா இடையிலான சிறப்பான மற்றும் பிரத்யேகமான ராஜாங்க உறவு, ஈடு இணையில்லாத பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம். எங்களிடையேயான உறவு கூட்டு நடவடிக்கையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாகவும், குறிப்பாக அரசியல் உறவு, பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், ராணுவம், தொழில்நுட்ப பிரிவு, எரிசக்தி, அறிவியல், கலாச்சாரம், மனிதாபிமான உதவிகள், வெளியுறவுக் கொள்கைகள், இரு நாடுகளுக்குமான தேசிய நலன்களை ஊக்குவிக்க உதவுதல், மேலும், அமைதியான மற்றும் உலக ஒழுங்கை மேம்படுத்துவதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
எங்கள் பரஸ்பர உறவு, ஆழமான பரஸ்பர புரிந்துக்கொள்ளும் தன்மை, மதிப்பளித்தல், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றுடன் வெளியுறவுக்கொள்கைக்கு மதிப்பளித்தல் அடிப்படையிலானது. அமைதி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாகரீகம் மற்றும் மனிதத்தன்மையை வலுப்படுத்தும் அணுகுமுறைகளுக்கும் நாங்கள் ஆதரவாக உள்ளோம். இந்தியா&ரஷ்யா இடையிலான உறவானது, சோதனையான நேரத்திலும் வெளிப்புற தாக்கத்தின்போதும், ஒன்றிணைந்து நின்றுள்ளன.
சுதந்திர போராட்டத்தின்போது, இந்தியாவுக்கு எந்த மனமாச்சரியமும் இல்லாமல் ரஷ்யா ஆதரவு அளித்தது. மேலும், தன்னிறைவு அடைவதற்கும் உதவியது. 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், எங்களுடைய நாடுகள் அமைதி, நட்புறவு, கூட்டு நடவடிக்கை க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், பரஸ்பர உறவுகளான அடுத்த நாடுகளின் இறையாண்மை, நலன்கள் மற்றும் நல்ல அண்டை நாடுகளுக்கான அடையாளங்கள் மற்றும் அமைதி ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிக்கோடிட்டு காட்டுவதாக அமைந்தது. இருபது ஆண்டுகளுக்கு பின்னர், 1993ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவும், ரஷ்யாவும், நட்புறவு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை புதுப்பித்து கொண்டன. இந்திய குடியரசு மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கு இடையேயான ராஜாங்க உறவு குறித்து, 2000ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி வெளியிடப்பட்ட பிரகடனம், பரஸ்பர உறவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றது. அதாவது சர்வதேச அமைதி, பாதுகாப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றுடன், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை அர்த்தமுள்ளதாக ஆக்கியது. இரு தரப்பு உறவானது, 2010ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி சிறப்பு மற்றும் பிரத்யேக ராஜாங்க பங்களிப்பு என்ற மேலும் உயர்ந்த நிலையை எட்டியது.
இந்தியா & ரஷ்யா இடையிலான ஒருங்கிணைந்த உறவை முன்னெடுத்து செல்லும் அதே நேரத்தில், இரு நாடுகளின் பரஸ்பர வெளியுறவுக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையிலான நடவடிக்கைகள், பரஸ்பரஸ் உறவை வலுப்படுத்தும் மற்றும் செறிவூட்டும் திட்டங்கள் ஆகியவற்றின் நாங்கள் எங்களுடைய இருதரப்பு உறவை மேலும் முன்னெடுத்து சென்று, அர்த்தமுள்ளதாக ஆக்குவோம்.
இந்தியாவும் ரஷ்யாவும் பரஸ்பரம் எரிசக்தி துறையில் உதவுகின்றன. எங்களுடைய நாடுகளுக்கு இடையே எரிசக்தி மேம்பால கட்டுமானத்தை ஏற்படுத்தும் வகையில் எங்களுடைய ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவோம். எரிசக்தி துறையின் அனைத்து பகுதிகளான அணுசக்தி, நீர்மின் திட்டம், அனல் மின்நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிசக்தி திறனை மேம்படுத்துதல் ஆகிய அனைத்திலும் இருதரப்பு உறவை விரிவுப்படுத்துவோம்.
இந்தியாவும், ரஷ்யாவும், இயற்கை எரிவாயுவை பெரிய அளவில் பயன்படுத்துகின்றன. இது பொருளாதார அளவில் சி க்கனமானது மற்றும் சுற்றுச்சூழலு க்கு பாதுகாப்பான எரிபொருளாகும். மேலும், இது பசுமை க்குடில் வாயு மாசுவை குறைப்பதாகவும், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்த விதிகளை பூர்த்தி செய்ய உதவுவதாகவும் அமைந்துள்ளது. அதேசமயம் நீடித்த பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடைய உதவுகிறது. அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்தும் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க உறவில், முத்திரையான அம்சம்களுள் ஒன்றாகும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப கூட்டுறவில் இதற்கு முக்கிய பங்களிப்பு அளிக்கப்படுகிறது. கூடன்குளம் அணுமின்நிலைய திட்டப்பணிகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் அதை இந்தியாவின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக ஆ க்குதல் ஆகியவை உட்பட இருதரப்பிலும் சிவில் அணுசக்தி கூட்டு நடவடிக்கையில் ஸ்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடன்குளம் 5 மற்றும் 6வது அணுஉலைகளுக்கான பொது விதிமுறைகள் ஒப்பந்தம் மற்றும் கிரெடிட் புரோட்டோகால் முடிவுகளை நாங்கள் வரவேற்கிறோம். 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இரு நாடுகளுக்ககு இடையே மேற்கொள்ளப்பட்ட அமைதி வழி அணுசக்தி பயன்பாட்டு தொடர்பான தொலைநோக்கு ராஜாங்க ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எதிர்க்காலத்தில் இந்தியா & ரஷ்யா கூட்டுறவானது, அணுசக்தி, அணு எரிபொருள் சுழற்சி, அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுதவற்கான உறுதியை ஏற்றுள்ளது.
அணுசக்தி துறையில் இந்தியா, ரஷ்யா இடையிலான வளர்ந்து வரும் கூட்டு நடவடிக்கை, அணுசக்தி உற்பத்தி திறன்களை ‘இந்தியாவிலேயே தயாரிப்போம் க் என்ற மத்திய அரசின் கொள்கையின் அடிப்படையில் புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கையெழுத்திடப்பட்ட ‘இந்தியாவில் உள்ளூர்மயமாக்கலு க்கான நடவடிக்கை திட்டங்கள் ஒப்பந்தத்தை அமலாக்கும் வகையில் இந்தியாவும், ரஷ்யாவும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. மேலும், தங்களுடைய அணுசக்தி ஆலைகள் ஒன்றிணைந்தும், வேகமாகவும் இணைந்து செயல்பட ஊ க்குவிக்கின்றன.
ரஷ்ய கூட்டமைப்பின் ஆர்டிக் படுகையில் துரப்பண மற்றும் ஹைட்ரோகார்பன் சுரண்டலை தடுக்கும் நடவடிக்கையில் கூட்டு திட்டங்களை செயல்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
ஆழ்கடல் துரப்பணப்பணி, ஹைட்ரோகார்பன் ஆதாரங்களை மேம்படுத்துதல், பாலிமெட்டாலி க் நோடூயூல்ஸ் மற்றும் பிற கடல்சார் ஆதாரங்களை, கடல் ஆய்வுகள் மற்றும் பரஸ்பர பயன்தரும் வகையிலான பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் வளங்களை இருதரப்பும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்க உள்ளோம்.
இந்தியாவில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் அதன் கட்டுமானங்களை புதுப்பித்தல் மற்றும் நவீன மயமயப்படுத்துதல் நடவடிக்கையில், இரு நாடுகளிலும் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். தொழில்நுட்பம், பல்வேறு நிலப்பரப்பில் பணியாற்றிய அனுபவங்கள், பருவநிலைகள் மற்றும் எரிசக்தி திறனை மேம்படுத்தும் தொழில்நுட்ப ஆகியவற்றை பரிமாறி க் கொள்வதன் மூலம் சுத்தமான, சுற்றுச்சூழலு க்கு பாதிப்பில்லாத மற்றும் குறைந்த விலையிலான எரிசக்தி ஆதாரங்களை பரஸ்பரம் அடுத்த நாட்டில் உருவாக்குவதற்காக நாங்கள் கூட்டு நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவாக்கம் செய்தல், சரக்கு மற்றும் சேவைகளில் பன்முகத்தன்மை கொண்ட வர்த்தகம் ஆகியவை எங்களுடைய முக்கிய பொருளாதார கொள்கைகள் முக்கியமானவை. குறிப்பாக, இருதரப்பு வர்த்தகத்தில் உயர் தொழில்நுட்ப உற்பத்தியை பகிர்தல், தொழிற்துறை கூட்டு நடவடிக்கைகள், இருநாடுகளின் வங்கித்துறை, நிதி விவகாரங்களில் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது ஆகும். இருதரப்பு தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியிலான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றை, ஒப்புக்கொள்ளப்பட்ட துறைகளின் கூட்டு மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மூன்றாவது நாட்டுகளுக்கு விரிவாக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இரு தரப்பு வர்த்தகத்தில் பிற கரன்சிகளை நம்பியிரு க்காமல், இந்தியா & ரஷ்யா வர்த்தகத்தில் தேசிய கரன்சிகளை பயன்படுத்தி தீர்வு காணுதலை ஊ க்குவிப்பது தொடர்பாக நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ரஷ்ய வங்கி ஆகியவை வடிவமைத்துள்ள வர்த்தக ஒப்பந்தத்துகளுக்கு தேசிய கரன்சிகள் மூலம் நிதி செலுத்தும் வழிமுறைகள் மற்றும் திட்டங்களை, நம்முடைய வர்த்தக சமுதாயம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நாங்கள் கூட்டாக ஊ க்குவிக்க உள்ளோம்.
சந்தை பங்கேற்பாளர்களுக்காக, சுதந்திரமான மற்றும் அரசியல் சந்தர்ப்பங்களுக்கு அப்பாற்றப்பட்ட கடன் மதிப்பீட்டு சந்தையை மேம்படுத்த நாங்கள் எங்களது நிலையை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக கடன் மதிப்பீட்டு துறையிலான எங்கள் சட்டங்களையும் அதேசமயம் உள்ளூர் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் தரவரிசைகளை அங்கீகரிப்பதையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க உள்ளோம்.
பிராந்திய அளவில், பொருளாதார கூட்டு நடவடிக்கையின் வளர்ச்சி அவசியம் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இதற்காக யூரேசியன் பொருளாதார யூனியன் மற்றும் இந்திய குடியரசு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மிக விரைவாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்த உள்ளோம்.
அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்துக்காக பிராந்தியங்களின் தொடர்பு அவசியம் என்ற தர்க்கரீதியிலான வாதத்தை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.
பேச்சுவார்த்தை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரின் ஒத்ததீர்வு மூலம் இறையாண்மை க்கு மதிப்பளிக்கும் வகையில் இது அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ரஷ்யா மற்றும் இந்தியா தரப்புகள், வெளிப்படைத்தன்மை, நீடித்த தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது. சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து சாலை மற்றும் பசுமை சாலைத் திட்டம் ஆகியவற்று க்கான சீரிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதலில் தங்களுடைய பங்களிப்பை உறுதியேற்றுள்ளன. அறிவுசார் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், அதை நவீன அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் மேற்கொள்ளவும், இரு நாடுகளும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும். வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி உயர் தொழில்நுட்ப உற்பத்திக்காக வெளிநாட்டு சந்தைகளை வரவழைத்தல், விண்வெளி தொழில்நுட்பம், விமானவியல் ஆகியவற்றில் அறிவியல் ரீதியிலான கூட்டு நடவடிக்கை, புதிய கனிமங்கள், விவசாயம், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், மருந்துகள், மருந்து துறை, ரோபோட்டிக்ஸ், நானோ தொழில்நுட்பம், சூப்பர்கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டிரியல் அறிவியல் ஆகியவற்றில் கூட்டு நடவடிக்கையை விரிவாக்கம் செய்ய உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே, உயர் தொழில்நுட்பத்தில் கூட்டு நடவடிக்கை தொடர்பாக, உயர்நிலை க் குழு ஒன்றை அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
உள்கட்டமைப்பை மேம்பாட்டை நவீனமயமாக்குதல், நகர்ப்புறமயமாதலால் ஏற்படும் சவால்களை எதிர்க்கொள்வது தொடர்பான வழிமுறைகளை கூட்டாக கண்டறிதல், உணவு பாதுகாப்பை உறுதிசெய்தலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், தண்ணீர் மற்றும் வன ஆதாரங்களை பாதுகாத்தல், பொருளாதார சீர்த்திருத்தம், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான தேசிய திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு ஆகியவற்றின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வழிகளை நாங்கள் ஆராய உள்ளோம்.
வைர தொழில்துறையில் கூட்டாக செயல்பட, வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாக ஒருங்கிணைந்து செய்படவும், அதற்காக இத்துறையில் நமது இரு நாடுகளிலும் உள்ள பலம் மற்றும் வளங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கண்டறியப்படாத செயற்கைக் கற்கள் வைரச்சந்தையில் நுழைவதால் ஏற்படும் சவால்களை எதிர்க்கொள்ளவும், வைரங்களுக்காக பொதுச் சந்தை திட்டங்களை ஏற்படுத்தவும், நாங்கள் எங்களது கூட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
கப்பல் கட்டுமானம், ஆற்று வழிச்சாலை மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரஷ்யாவுக்கு உள்ள நிபுணத்துவத்தை அங்கீகரித்து, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அனுபவ பகிர்வு மூலமான உள்நாட்டு நீர்வழிச்சாலைகளை மேம்படுத்துதல், ஆற்றுப்படுகைகள், துறைகமுகங்கள், இந்தியாவில் உள்ள விரிவான ஆறு அமைப்பை பயன்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்துதல் பற்றிய கூட்டு திட்டங்களை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம்.
இதேபோல், அதிவேக ரயில்கள், பிரத்யேக சரக்கு போக்குவரத்து காரிடார்கள், கூட்டு நடவடிக்கையில் புதிய தொழில்நுட்பம் மூலம் சீரிய ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப பரிமாற்றம், ரயில் சாலை துறையில் இரு நாடுகளின் ஆற்றலில் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் பணியாளர் பயிற்சி ஆகியவை தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம்.
அடுத்தவர்களின் நாடுகளில் வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சந்தை அணுகுமுறையை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். மேலும், விவசாயம், அறுவடை, உற்பத்தி, சந்தைக்கான பதனிடுதல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இரு நாடுகளிலும் உள்ள வளங்களை சீரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான கூட்டுத்திட்டங்களை ஏற்படுத்துதல் தொடர்பான வாய்ப்புகளை ஆராய உள்ளோம். மேலும், கனிமம் மற்றும் உலோகவியல் துறையில் புதிய தொழில்நுட்ப பரிமாற்றம், உருவாக்கம் மூலம், கட்டுப்படியாகும் நிதியிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்ளவும் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.
2020ம் ஆண்டில் விமான போக்குவரத்து சந்தையில் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவாகும் என்று கருதுகிறோம். இதன் காரணமாக இந்திய அரசின் பிராந்திய அளவிலான இணைப்புகள் திட்டம், விமான உற்பத்தி துறையில் உள்ள தேவைகளை ஈடுகட்டுவதற்கான வாய்ப்புகளும், அவற்றை மூன்றாவது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என்பதும், கூட்டு நடவடிக்கைகளை பலப்படுத்தி, கூட்டு தொழிற்சாலைகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதை உணர்கிறோம்.
நமது பரஸ்பர பாதுகாப்பு கூட்டு நடவடிக்கைகள், வலிமையான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததாகும். ரஷ்யா தனது நவீன ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு நடவடிக்கையை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் உள்ளோம். கூட்டு உற்பத்தி, கூட்டு தயாரிப்பு மற்றும் கூட்டு ராணுவ ஹார்டுவேர் மற்றும் ராணுவ உதிரிபாகங்கள் தயாரிப்பில் எதிர்கால தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பகிர்தல் மூலம் இது செய்யப்படும். இப்போதுள்ள ராணுவ தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கை ஒப்பந்தங்கள் அடிப்படையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
ராணுவ அளவிலான ஒத்துழைப்பை உயர் அளவிலான தரமானதாக மாற்ற ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். நிலம் மற்றும் கடல் அளவிலான கூட்டு ராணுவ பயிற்சிகளை நாங்கள் நாங்கள் தொடர்ந்து வருகிறோம். மேலும், அடுத்தவர்கள் நாட்டில் உள்ள ராணுவ பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக முப்படைகளின் கூட்டுப்பயிற்சி ‘இந்திரா-2017 க் என்ற பெயரில் நடக்க உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில், சமூகநலனு க்கு பொருத்தமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான ஏராளமான கூட்டு ஆய்வு வாய்ப்புகள் கொட்டிப்பதாக நாங்கள் நினை க்கிறோம். மேலும், இயற்கை பேரிடர்களை எதிர்க்கொள்ளும் வகையில் கூட்டாக செயல்படவும் தீர்மானித்துள்ளோம். நம்முடைய பிராந்தியத்திலும், நாடுகளிலும் சீரிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடனும், ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இலக்குடனும் செயல்பட தீர்மானித்துள்ளோம்.
நாடுகளிடையே உறவை ஏற்படுத்த வேண்டிய இயற்கையான மற்றும் தவிர்க்க முடியாத நடவடிக்கையில், இந்த 21ம் நூற்றாண்டில் பல்துருவ சர்வதேச ஒழுங்குமுறை உருவாக வேண்டியது அவசியம் என்று இந்தியாவும் ரஷ்யாவும் கருதுகின்றன. இதற்காக, சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலான சர்வதேச உறவு முறையை ஜனநாயக ரீதியாகவும், உலக அரசியலுக்கான ஐ.நா. சபையின் ஒருங்கிணைந்த மத்திய பங்கிற்காகவும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். ஐக்கிய நாடுகள் சபையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்ய்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதன் மூலம்தான், எதிர்ப்படும் சவால்களையும், மிரட்டல்களையும் சீரிய முறையில எதிர்க்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். மறுசீரமை க்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதில் ரஷ்யா தனது உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சமாதானத்தை வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, சவால்கள், மிரட்டல்கள் மற்றும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் சாதாரணமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எதிர்க்கொள்ளவும் ஒருமித்த கருத்து கொண்ட சர்வதேச திட்டங்கள் உருவாக நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
சர்வதேச சமுதாயத்தில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் நலன்களுக்கும் தகுந்த இடம் கிடைக்கும் வகையில், ஜனநாயகமாக்கல் விரைவுப்படுத்துதல், சர்வதேச அரசியல், பொருளாதாரம், நிதி மற்றும் சமூக அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அதேசமயம் தன்னிச்சைமயம் அல்லது இறையாண்மையை மதிப்பதில் உள்ள சுணக்கம், நாடுகளின் கவலைகளை புறந்தள்ளுதல், சம்பந்தப்பட்ட நாடுகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஆகியவற்றை நாங்கள் எதிர்ப்போம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரிய அளவிலான நிர்ப்பந்தத்தின் கீழ் ஒருதலைபட்சமான அரசியல் மற்றும் பொருளாதார தடைகளை விதிப்பதை எதிர்ப்போம்.
பிரிக்ஸ் அமைப்புக்குள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இது, நமது கூட்டு முயற்சியின் விளைவாக, சர்வதேச விவகாரங்களில் அதிகாரப்பூர்வமான மற்றும் ஆதிக்கமி க்க பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.
நாங்கள் தொடர்ந்து பிற பல்முனை நிறுவனங்கள மற்றும் அமைப்புகளான டபிள்.யு.டி.ஓ. ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ரஷ்யா&இந்தியா&சீனா ஒத்துழைப்பு ஆகியவற்றில் கூட்டாண்மையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருவோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவுக்கு முழு உறுப்பினர் பதவி அளிப்பதன் மூலம், அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சியை எட்டுவது மற்றும் யூரேசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளம் ஏற்படும் என்று நம்புகிறோம். அதேசமயம் அமைப்பின் சர்வதேச நிலை உயரும் என்றும் கருதுகிறோம்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திறந்த மற்றும் சமச்சீரான, அதேசமயம் பாதுகாப்பு கட்டமைப்பை உள்ளடக்கிய கட்டுமானத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். கொள்கைகள் பகிர்வு, இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் சட்டரீதியிலான நலன்கள் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும். கிழக்கு ஆசிய மாநாடு விதிமுறைகளின்கீழ் உரிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதும் இதில் அடங்கும்.
மேலும், கிழக்கு ஆசிய, வட அமெரிக்கா, சிரியா விவகாரத்தில் தீர்வு, ஆப்கானிஸ்தான் மறுகட்டுமானம் ஆகிய விவகாரத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதலில் உருவாகும் சவால்களை எதிர்க்கொள்வது தொடர்பாக எங்களுடைய நிலைகளை மேலும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை மாஸ்கோ பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், தேசிய இறையாண்மை கொள்கைகளுடன், உள்விவகாரங்களில் தலையீடு இல்லாமல், அதேசமயம் இந்த நாடுகள் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் பரவல் தடுப்பு தொடர்பாக இந்தியாவும், ரஷ்யாவும் சரிசமமான பங்களிப்பை கொண்டுள்ளன. பன்முக ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியாவை இணைக்கச் செய்வதன் மூலம், அதன் செயலாக்கம் விரிவடையும் என்று ரஷ்யா கருதுகிறது. இதன் காரணமாக அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அமைப்பு மற்றும் வாசெனார் ஏற்பாடு ஆகியவற்றில் உறுப்பினராக சேர்க்கக் கோரும் இந்தியாவின் மனுவை ரஷ்யா வரவேற்கிறது. மேலும், இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்புகளில் விரைவில் இந்தியாவைச் சேர்க்க வேண்டும் என்று ரஷ்யா தனது உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் கருத்தியல்களையும் நாங்கள் தீவிரமாக கண்டிக்கிறோம். தீவிரவாதத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்த முடியாது என்று வலியுறுத்துகிறோம். அது கருத்தியல், மதம், அரசியல், இனம் அல்லது வேறு எந்த காரணங்களுக்காக இருந்தாலும், அதை ஏற்க முடியாது. சர்வதேச தீவிரவாதத்தை ஒன்றிணைந்து எதிரத்து போராடுவதை தொடர்வோம். இது அமைதி மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா விதிகளின் கீழ் சர்வதேச சமுதாயம், இரட்டைநிலை மற்றும் சார்புநிலை இன்றி, பெருமளவில் பரவி உள்ள இந்த மிரட்டலை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து நாடுகள் மற்றும் அமைப்புகள், தீவிரவாதிகளின் வலைப்பின்னலை நொறுக்கவும், அவர்களுக்கான நிதியை தடுக்கவும், எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை ஒழி க்கவும் முன்வரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் சர்வதேச அளவில் நடவடிக்களை தீவிரப்படுத்த முடியும் என்பதுடன் சட்ட விதிகளை கடுமையா க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.
தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டில் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் பொது அணுகுமுறை பகிர்வின் கீழ் சர்வதேச விதிமுறைகள், தரநிலைகள், மற்றும் இதுதொடர்பாக நாடுகளின் பொறுப்புணர்வுத் தன்மை கொள்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்த ஒன்றிணைந்து செயல்பட தீர்மானி க்கப்பட்டுள்ளது. சர்வதேச இணையதள நிர்வாகத்தில், ஜனநாயகத்தன்மை மற்றும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு பிரிவினரின் பங்களிப்பு அளித்தல் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட உள்ளது.
தகவல் மற்றம் தொலைத்தொடர்பு பாதுகாப்பு விஷயத்தில், இந்தியா, ரஷ்யா அரசுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், பரஸ்பர பேச்சுவார்தையை அவசியம் நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரித்துள்ளோம். பரஸ்பர நலன், கருத்து, இந்தியா & ரஷ்யா மக்களிடையேயான மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலாச்சாரம், விளையாட்டு, வருடாந்திர அளவில் விழாக்களை நடத்துதல், பரிமாறிக் கொள்ளுதல் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேலும் விரிவாக்கம் செய்வது என்று தீர்மானித்துள்ளோம். 2017&18ம் ஆண்டில் இந்தியா&ரஷ்யா இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டதன் 70வது ஆண்டு விழாவை, இரு நாடுகளின் பல்வேறு நகரங்களில் கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.
கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதனடிப்படையில் கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுத்துப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். பல்கலைக்கழகங்களுக்கு இடையே நேரடி தொடர்பு, இரு நாடுகளிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எங்களுடைய கூட்டு ஒத்துழைப்பு பல்வேறு சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி, சைபர் பாதுகாப்பு, கைக்கு எட்டும்படியான சுகாதார நலன், கடன் மற்றும் உயிரியல் உள்ளிட்ட சர்வதேச சவால்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம். அறிவியல் ரீதியிலான கண்டுபிடிப்புகள் மற்றும் பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவை எதிர்க்கொள்ளப்படும். அறிவுசார் மையங்களின் வலைப்பின்னல், மனிதர்கள் மற்றும் அறிவியல் காரிடார்களை இணைத்து புதுமைகளை கொண்டு வருதல், சமூக மேம்பாட்டுக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இணைந்து செயல்பட உள்ளோம்.
மேலும், சுற்றுலாத்துறை மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளை விசா நடைமுறைகளை எளிமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மேலும் அவற்றை விரைவாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவும், ரஷ்யாவும் இரு நாடுகளுக்கு இடையே ஒத்திசைவு மற்றும் பரஸ்பரம் பலனடையும் ஒத்துழைப்பை கொண்ட, நெருங்கிய நட்பு நாடுகள் என்ற பெருமையில் தொடர்ந்து நடைபோடும் என்பதில் நாங்கள் நம்பி க்கையுடன் உள்ளோம். பரஸ்பர உறவுகளின் வளர்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில், இந்தியா & ரஷ்யாவும் தங்களிடையேயான சிறப்பு மற்றும் தனித்துவம் வாய்ந்த ராஜாங்க ஒத்துழைப்பை, நமது நாடுகளும், ஒட்டுமொத்தமாக சர்வதேச சமுதாயமும் பயன்பெறும் வகையில், மேலும் வலுப்படுத்துவதில் வெற்றி பெறுவோம்.