பிரதமர் திரு. நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இருதரப்பு ஒத்துழைப்பின் பல பிரச்சினைகளில் முன்னேற்றத்தை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர். ஜொகன்னஸ்பர்கில் சமீபத்தில் நிறைவடைந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு உட்பட பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
2023 செப்டம்பர் 9-10 தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்த அதிபர் திரு புதின், ரஷ்யாவின் பிரதிநிதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் அனைத்து முன்முயற்சிகளுக்கும் ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆதரவுக்காக அதிபர் திரு புதினுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேச்சு நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
***
AD/ANU/IR/RS/KRS
(Release ID: 1953027)