Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய அதிபர் – பிரதமர் திரு.நரேந்திர மோடி இடையிலான தொலை பேசி உரையாடல்


ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புடினிடம் இருந்து, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது.

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றி கலந்து பாராட்டை தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான தனிச்சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர். கொவிட்-19 தொற்று நேரத்திலும், இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு இரு நாட்டு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.  இந்த நேரத்திலும், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாஸ்கோ சென்றதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

இந்தாண்டு பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு(SCO ) ரஷ்ய அதிபர் புடின் வெற்றிகரமாக தலைமை தாங்கியதற்கு  பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.  இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புபிரிக்ஸ் மற்றும் இந்தியா நடத்தும் எஸ்.சி.ஓ அமைப்பின் தலைவர்கள் குழு கூட்டத்திலும்  கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவம், பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் உறுதியுடன் இருப்பதற்காக, அதிபர் புடினுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இருதரப்புக்கும் சாதகமான தேதியில், இந்தியாவில் அடுத்த இருதரப்பு கூட்டத்துக்கு ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புடினை வரவேற்பதை ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

****************