ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை ஒட்டி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் திரு நரேந்திரமோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். அதிபர் புட்டின் பெற்ற வெற்றிக்காக தமது பாராட்டுக்களைத் தெரிவித்த பிரதமர், அதிபர் புட்டின் தலைமையின்கீழ், இந்தியா-ரஷ்யா இடையிலான “சிறப்பு வாய்ந்த மற்றும் நீடித்த முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு” தொடர்ந்து மென்மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியா வரும் அதிபர் புட்டினை வரவேற்க ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியமைக்காக பிரதமருக்கு, அதிபர் புட்டின் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவை அனைத்து வகைகளிலும் மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டிருப்பதாக குறிப்பிட்ட அதிபர் புட்டின், இந்தியாவும், இந்திய மக்களும் தொடர்ந்து வளம்பெறவும், தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
—–