Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய அதிபர் இந்தியாவிற்கு வருகையின்போது பிரதமரின் பத்திரிக்கை அறிக்கை


மேதகு அதிபர் விளாடிமிர் புதின்,

மதிப்புமிக்க ரஷ்யா மற்றும் இந்திய குழுக்களின் உறுப்பினர்களே,

ஊடக உறுப்பினர்களே,

இன்று கோவாவில், இந்தியாவின் பழைய நண்பர், அதிபர் புதின் அவர்களை வரவேற்பது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. ரஷ்ய மொழியில் கூறுவதை போல:

स्तारीय द्रुग लुछे नोविख़ द्वुख

[பொருள்: இரண்டு புதிய நண்பர்களைவிட பழைய நண்பன் சிறந்தவன் ஆவான்.]
மேதகு புதின், நீங்கள் இந்தியாவின் மீது கொண்டுள்ள அதிக நெருக்கத்தை நான் அறிவேன். நமது உறவிற்கு உங்களது தனிப்பட்ட கவனம் வலுசேர்ப்பதற்காக உள்ளது. மாறிவரும் உலகசூழலில், உங்களது தலைமை நமது உறவிற்கு நிலைத்தன்மையையும், உறுதியையும் அளித்துள்ளது. நமது உறவு உண்மையான மற்றும் உயரிய உறவாகும்.

நண்பர்களே,

கடந்த இரண்டு வருடாந்திர உச்சிமாநாடுகளிலிருந்து, நமது கூட்டுப்பயணம் புதுப்பித்த புதிய பார்வையையும், முனைப்பையும் கண்டுள்ளது. நமது முழுமையான பங்களிப்புகள் குறித்து அதிபர் புதினும், நானும் விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளோம். எங்களது கூட்டத்தின் முடிவில், நமது நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பிற்கான, சிறப்பு மற்றும் முன்னுரிமைகளை தெளிவாக்கி உள்ளது. அவை வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளுக்கான ஆழ்ந்த அடிக்கற்களை அமைத்துள்ளது. கமோவ் 226டி ஹெலிகாப்டர்கள்; போர் கப்பல்கள் கட்டுமானம்; இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கேற்ப கொள்முதல் செய்தல் மற்றும் பாதுகாப்பு தளங்களை கட்டுதல் போன்றவற்றிக்கான ஒப்பந்தங்களாகும். அவை இந்தியாவில் உருவாக்குவோம் என்பதன் குறிக்கோள்களை நாம் அடையவும் உதவும். இரு தரப்பை சார்ந்த பங்குதாரர்கள் கூட்டாக பயனடையும் வகையில் வருடாந்திர இராணுவ தொழிற் மாநாட்டை நடத்துவதற்கு பணியாற்றவும் ஒப்புக் கொண்டுள்ளோம். நமது நீண்ட வலுவான மற்றும் பன்முக பாதுகாப்பு கூட்டு வரலாற்றில், இந்த திட்டங்கள் புதிய சகாப்தங்களாகும். சில நிமிடங்களுக்கு முன்பாக, கூடங்குளம் 2 அர்பணிப்பு மற்றும் கூடங்குளம் 3 மற்றும் 4 ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டியது ஆகியவற்றின் மூலம், பொது அணு எரிசக்தி துறையில் இந்திய-ரஷ்யா கூட்டுறவின் உறுதியை நாம் காணலாம். மேலும், எட்டு புதிய அணுஆலைகள் கட்ட உத்தேசித்துள்ளது, இரு தரப்பும் அணுசக்தி துறையில் மிகுந்த பயன் பெற உதவும். இது நமது எரிசக்தி பாதுகாப்பு தேவையையும், உயரிய தொழில்நுட்ப அணுகுதலுக்கும், அதிகளவிலான உள்ளூர்மயமாக்கல் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்றதாக அமையும். கடந்த ஆண்டு மாஸ்கோவில், ரஷ்யாவின் ஹைட்ரோகார்பன் துறையில் எங்களது பங்களிப்பை அதிகரிக்கச் செய்வோம் என நான் கூறினேன். கடந்த நான்கு மாதங்களில் மட்டும், ஹைட்ரோகார்பன் துறையில் எங்களது வலுவான மற்றும் ஆழ்ந்த உறுதியை வெளிப்படுத்தும் வகையில், இந்திய நிறுவனங்கள், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளன. அதிபர் புதின் உதவியுடன், நமது உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் தயாராகவும், விருப்பமாகவும் உள்ளோம். நமது இரு நாடுகளிடையே எரிவாயு குழாய் பாதை அமைக்க கூட்டு ஆய்வினை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். உறுதியான பொது அணுசக்தி கூட்டுறவு, எரிவாயு கொள்முதல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கூட்டு, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஈடுபாடு ஆகியவை இரு நாடுகளிடையே ‘எரிசக்தி பாலத்தை’ உருவாக்கும்.

நண்பர்களே,

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நாங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். இதன் மூலம் நமது சமூகங்கள் கூட்டு வளர்ச்சி, பல்வேறு துறைகளில் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் மற்றும் பகிர்வு பயன்களை பெறும். இந்த இறுதி மாநாட்டில், நாங்கள் எங்களது பொருளாதார பங்களிப்பை விரிவாக்கவும், பன்முகப்படுத்தவும் மற்றும் அதிகரிக்க செய்யவும் வகையில் தொடர உள்ளோம். இன்று நமது இரு நாடுகளிடையே வணிகங்கள் மற்றும் தொழில்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளன. வணிகம் மற்றும் முதலீடு கூட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிபர் புதின் அவர்களின் துணையுடன், ஈரோஏசியன் பொருளாதார கூட்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் இணைப்பு விரைவில் நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம். பசுமை பாதை மற்றும் பன்னாட்டு வடக்கு தெற்கு போக்குவரத்து பாதை ஆகியவை எளிமையான வர்த்தகம், விநியோக இணைப்புகள் மற்றும் இரு நாடுகளிடையே சிறந்த இணைப்பினை ஏற்படுத்தும். தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதி (என்.ஐ.ஐ.எப்.) மற்றும் ரஷ்யா நேரடி முதலீடு நிதி (ஆர்.டி.ஐ.எப்.) இடையே 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு நிதியாக விரைவில் உருவாக்கும் எங்களது முயற்சி, எங்களது உட்கட்டமைப்பு கூட்டை அதிகரிக்க செய்யும். இரு நாடுகளிலும் உள்ள பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களை இணைக்கும் வகையில் எங்களது பொருளாதார தொடர்புகள் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.

நண்பர்களே,

இந்த மாநாட்டின் வெற்றி, இந்திய-ரஷ்யா நிர்ணயிக்கப்பட்ட கூட்டினை வலுவாக்குவதில் முக்கியமிடத்தை பெற்றுள்ளது. இது பன்னாட்டு மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் எங்கயது உறுதியான ஒருமுகப்பட்ட பார்வை மற்றும் நிலையை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவின் தீவிரவாத்திற்கு எதிரான பார்வையே எங்களுடைய பார்வையும் ஆகும். எங்களது மொத்த பகுதிக்கும் அச்சுறுத்தும் எல்லை-தாண்டிய தீவிரவாதத்திற்கான எங்கயது செயல்களை புரிந்துக் கொண்டு, ஆதரவு அளிப்பதற்காக ரஷ்யாவை நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக போராடுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆப்கானிஸ்தானில் உள்ள சூழ்நிலை மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள குழப்பங்கள் ஆகியவற்றில் ஒரே பார்வையை கொண்டுள்ளதை அதிபர் புதின் மற்றும் நானும் அறிந்துக் கொண்டோம். உலக பொருளாதாரம் மற்றும் வணிக சந்தைகளின் நிலையற்ற தன்மை ஏற்படுத்திய சவால்களுக்கு எதிராக ஒன்றாக பணியாற்றவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். ஐக்கிய நாடுகள், பிரிக்ஸ், கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, ஜி-20, ஷாங்காய் கூட்டுறவு நிறுவனம் ஆகியவற்றில் நமது நெருங்கிய கூட்டு, நமது கூட்டின் நோக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உண்மையான உலகமயமாக்கலை உருவாக்கும்.

மேதகு புதின்,

நாம், அடுத்தாண்டு நமது இராஜதந்திர உறவின் 70வது ஆண்டை நெருங்கும் நிலையில், நமது கடந்த கால சாதனைகள் மீது இந்தியா மற்றும் ரஷ்யா கொண்டாடுகின்றன. நமது பொதுவான குறிக்கோள்கள் மற்றும் இருபத்தோராவது (21வது) நூற்றாண்டிற்கான பகிர்ந்துகொள்ப்பட்ட இலக்குகளை எதிர்கொள்ளும் வகையிலான மாதிரி கூட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். எங்களது நெருங்கிய நட்பு, மிக தெளிவான திசையையும், புதிய உத்வேகத்தையும், வலுவான நிலையும் மற்றும் நமது உறவில் உயர்ந்த பொருளையும் அளித்துள்ளது. இது உருவாகி வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலபரப்பில், வலு மற்றும் வடிவிற்கான சக்தியாகவும், அமைதியின் இயக்கமாகவும் மற்றும் நிலைத்தன்மைக்கான காரணியாகவும் அமையும்.

ஒருவர் ரஷ்ய மொழியில் கூறுவது போல்:

इंडियाई रस्सीया-रुका अब रुकु व स्वेतलोय बदूशीय

[இந்தியா மற்றும் ரஷ்யா-ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒன்றாக]

நன்றி! உங்களுக்கு மிக்க நன்றி.