Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்யா செல்லும் முன் பிரதமர் விடுத்த அறிக்கை


இன்று நான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். அரசு அமைத்தப் பின் நான் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இந்த பயணம் நல்ல பயன் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

பல ஆண்டு காலங்களாக இந்தியா ரஷ்யா இடையேயான உறவிற்கு வரலாறே சாட்சி ஆகும். உலக நாடுகளில் ரஷ்யாவும் இந்தியாவின் முக்கிய நண்பராக உள்ளது.

2001ம் ஆண்டை நான் இன்று நினைவு கூறுகிறேன். அப்போது நான் குஜராத்தின் முதல்வராக, பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டேன். இதுவே ரஷ்யா-இந்தியாவின் ஆண்டு மாநாடாகும். இது இன்றைய தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

பொருளாதார, எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா ரஷ்யா இடையேயான உறவை எனது பயணம் வலுப்படுத்தும். அறிவியல், தொழில்நுட்பம், சுரங்கத் துறைகளிலும் உறவை மேம்படுத்த விரும்புகிறோம். இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் மேம்படுத்துவது, இந்த நாடுகளுக்கும் மட்டுமின்றி உலகிற்கே பயன் அளிக்கும்.

இந்த பயணத்தின் போது, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும். இந்தியாவில் முதலீடு செய்ய வரவேற்கும் வகையில் ரஷ்ய தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். மேலும் “இந்தியாவின் நண்பர்கள்” (பிரண்ட்ஸ் ஆப் இந்தியா) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். இரு நாட்டு மக்களின் உறவை இந்த பயணம் மேலும் மேம்படுத்தும் என்று நான் உறுதியாக உள்ளேன்.

***