Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷிய நாட்டிற்கு புறப்படும் முன் பிரதமர் அளித்த அறிக்கை


ரஷிய நாட்டிற்கு புறப்படும் முன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த அறிக்கை கீழ்வருமாறு:

“நட்புள்ளம் கொண்ட ரஷிய மக்களுக்கு வணக்கம். சோச்சிக்கு நான் நாளை வருகை தருவதற்காகவும் அதிபர் புதினை சந்திப்பதற்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கும் தருணமாகும்.

அதிபர் புதினை நான் சந்தித்துப் பேசிய பிறகு இந்தியா மற்றும் ரஷிய நாடுகளுக்கு இடையே உள்ள சிறப்பு மற்றும் தனித்துவம் மிக்க ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்”