பொருளாதாரம்
21. தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் இரண்டு தரப்பிலும் உள்ள ஏற்றுமதியாளர்கள்/ இறக்குமதியாளர்கள் விவரங்களைப் பெற தங்களது வர்த்தக கண்காட்சிகள் பட்டியல்கள் மற்றும் நிறுவனங்கள்/ ஏற்றுமதியை வளர்ப்பதற்கான கவுன்சில்கள் மற்றும் இதர ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
22. இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே கொண்டு செல்லப்படும் சரக்குகள் தொடர்பான சுங்க ஏற்பாடுகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் பசுமைவழித் திட்டத்தை விரைவில் துவங்குவதை இரு தரப்பும் ஆதரித்தன. பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமானதொரு நடவடிக்கையாக இது இருக்குமெனவும் அவை கருதுகின்றன. இத்திட்டம் துவங்கியபிறகு, அதை மேலும் விரிவுபடுத்தவும் இரண்டு நாடுகளிலும் உள்ள சுங்க நிர்வாகங்கள் உறுதிபூண்டுள்ளன.
23. இந்திய மாநிலங்கள், ரஷிய நாட்டின் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தவும், மேலும் உறுதிப்படுத்தவுமான முயற்சிகளையும் இருதரப்பினரும் பாராட்டினர். இந்திய குடியரசின் மாநிலங்கள், துணைநிலை மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் ரஷிய கூட்டமைப்பின் அங்கங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வேகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இருதரப்பின் வர்த்தகங்கள், தொழில்முனைவர்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றின் நேரடித் தொடர்புகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இருதரப்பும் அறிவுறுத்தியுள்ளது. அசாம்- சகாலின், ஹரியானா – பஷ்கோர்ட்டோஸ்தான், கோவா- காலினின்க்ராட், ஒடிசா – இர்குட்ஸ்க், விசாகப்பட்டினம்- வ்ளாடிவாஸ்டாக் ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நோக்கத்துடனான தீவிர முயற்சிகளை இருதரப்பும் வரவேற்றன. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார அமைப்பு, கிழக்கு பொருளாதார அமைப்பு மற்றும் பங்கெடுப்பு/முதலீட்டிற்கான உச்சிமாநாடுகள் ஆகிய முக்கிய நிகழ்வுகளில் பிராந்திய அளவிலான பிரதிநிதிகள் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்துவதென இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இந்திய-ரஷிய பிராந்தியங்களுக்கு இடையிலான அமைப்பை செயல்படுத்துவதென்ற நோக்கத்தையும் அது வரவேற்றது.
24. இயற்கை வளங்களை முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் பொருத்தமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாடு மற்ற நாட்டின் இயற்கை வளங்களை உற்பத்தி ரீதியாகவும், சிறப்பான வகையிலும் சிக்கனமாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான கூட்டுத் திட்டங்களைக் கண்டறிய செயல்படுவதென்று இருதரப்பும் ஒப்புக் கொண்டது.
விவசாயத் துறை இத்தகைய ஒத்துழைப்பிற்கான முக்கியமானதொரு பகுதி என்பதையும் இருதரப்பும் ஒப்புக் கொண்டதோடு, விவசாயப் பொருட்களின் அதிக உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றில் உள்ள வர்த்தக ரீதியான இடையூறுகளை அகற்றுவதெனவும் உறுதி பூண்டன.
25. பிஜேஎஸ்சி அல்ரோஸா நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கு கச்சா (பட்டைதீட்டப்படாத) வைரங்களை வழங்குவதற்கான நீண்டகால புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, மும்பை நகரில் அல்ரோஸா நிறுவன பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறப்பது, இந்திய சந்தை உள்பட வைரங்களை பொதுவாக விற்பதற்கான திட்டங்களை வளர்த்தெடுக்க சர்வதேச வைர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான இந்தியாவின் வைர மற்றும் நகை ஏற்றுமதி வளர்ச்சிக்கான கவுன்சிலும் அல்ரோஸாவும் இணைந்து நிதியுதவி வழங்குவது உள்ளிட்டு வைரத் துறையில் எட்டப்பட்டுள்ள ஒத்துழைப்பின் வீச்சை இரு தரப்பும் பாராட்டின. ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியில் வைர உற்பத்தித் தொழிலில் இந்திய நிறுவனங்களின் சமீபத்திய முதலீட்டை இருதரப்பும் சுட்டிக் காட்டின.
கூட்டுமுதலீடுகள், உற்பத்தி, வகைப்படுத்தல், தனித்திறன் மிக்க தொழிலாளர்கள் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் விலைமதிப்புமிக்க உலோகங்கள், கனிமங்கள், இயற்கை வளங்கள், மரங்கள் உள்ளிட்ட வன உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
26. தூரக் கிழக்கு ரஷியாவில் முதலீடு செய்ய வேண்டுமென இந்திய தரப்பினரை ரஷியத் தரப்புக்கு அழைப்பு விடுத்தது. தூரக்கிழக்கு முகமையின் அலுவலகம் ஒன்றை மும்பை நகரில் திறப்பதென்ற முடிவையும் இந்திய தரப்பு வரவேற்றது. 2018 செப்டெம்பரில் வ்ளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் மத்திய வணிகம், தொழில் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரான சுரேஷ் பிரபுவின் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலீடுகளைக் கவர்வதற்கும், தூரக் கிழக்குப் பகுதியில் மேலும் அதிகமான முதலீட்டை வளர்த்தெடுக்கவும் முதலீட்டிற்கான சிறப்பு நிகழ்வுகளை நடத்த ரஷியாவின் உயர்மட்டக் குழு இந்தியாவிற்கு வருகை தரும்.
27. தொழில்நுட்பம் மற்றும் வள ஆதாரங்கள் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று உதவி செய்யும் வகையிலான ரயில்வே, எரிசக்தி மற்றும் இதர துறைகளில் மூன்றாவது நாடுகளில் கூட்டுத் திட்டங்களை தீவிரமாக வளர்த்தெடுக்கவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
அறிவியல்- தொழில்நுட்பம்
28. அறிவியல் – தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதோடு, இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷிய கூட்டமைப்பின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு மேற்பார்வையில் 2018 பிப்ரவரியில் அறிவியல்-தொழில்நுட்பத்திற்கான 10வது இந்திய-ரஷிய செயல்பாட்டுக் குழு வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் அவை வரவேற்றன.
29. இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷிய கூட்டமைப்பின் அடிப்படை ஆய்விற்கான அமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான வெற்றிகரமான ஒத்துழைப்பையும் இருதரப்பும் பாராட்டின. அடிப்படை மற்றும் நடைமுறை அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வின் 10வது ஆண்டை இவை கடந்த 2017 ஜூன் மாதத்தில் கொண்டாடின. இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் இருதரப்பும் திருப்தியுடன் அங்கீகரித்தன. இந்திய குடியரசு மற்றும் ரஷிய கூட்டமைப்பின் அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைந்த நீண்ட கால திட்டத்தின் கீழ் பரஸ்பர முன்னுரிமையுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பகுதிகளில் பல்வேறு ஆய்வுக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே மேலும் ஒத்துழைப்பிற்கான செயல்திட்ட வரைபடத்தை உருவாக்குவதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கு உயிரூட்டவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
30. தகவல் மற்றும் தகவல்பரிமாற்றத் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக மின்னணுவியல் முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, மென்பொருள் மேம்பாடு, அதிவேக கணினி, மின் ஆளுகை, பொதுச் சேவைகள் வழங்கல், வலைப்பின்னல் பாதுகாப்பு, தகவல் மற்றும் தகவல்பரிமாற்றத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு, நிதிசார் தொழில்நுட்பம், பொருட்களுக்கான இணையம், தரவரிசைப்படுத்தல், அலைவரிசைக்கான கட்டுப்பாடு, அலைவரிசை ஒலிக்கற்றைகளின் ஒழுங்கமைப்பு ஏற்பாடு ஆகியவற்றில் தங்களது பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதெனவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. பிரிக்ஸ், ஐடியு உள்ளிட்ட பல்வேறு மேடைகளிலும் பரஸ்பரம் உதவிக் கொள்வது, ஒருங்கிணைந்து செயல்படுவதெனவும் இருதரப்பும் தீர்மானித்தன.
31. 2018 மார்ச் மாதத்தில் புதுதில்லியில் இந்தியாவின் வணிக- தொழில் அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் ரஷிய கூட்டமைப்பின் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சர் மாக்சிம் ஒரேஷ்கின் ஆகியோர் “இந்திய-ரஷிய பொருளாதார ஒத்துழைப்பு: முன்னேறிச்செல்வதற்கான வழி” என்ற கூட்டறிக்கையில் கையெழுத்திட்டதையும் இருதரப்பும் வரவேற்றன. இந்திய தொழில் நிறுவனங்களின் பெருங்கூட்டமைப்பும் ஸ்கோல்கோவோ ஃபவுண்டேஷனும் இணைந்து 2018 டிசம்பரில் முதல் முறையாக புதிய தொழில்களை துவங்குவதற்கான இந்திய-ரஷிய உச்சிமாநாட்டை நடத்துவது என்ற முடிவையும் அவை பெரிதும் பாராட்டின. இரு நாடுகளிலும் புதிய தொழில்முயற்சிகள் உலக அளவில் பரவவும், அதற்குத் தேவையான ஆதாரங்களை வழங்கவும் புதிய தொழில்கள் துவங்குவோர், முதலீட்டாளர்கள், காப்பாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இணையதளம் ஒன்றை துவக்குவது என்ற கருத்தையும் அவர்கள் வரவேற்றனர்.
32. நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற, இரு தரப்பினக்கும் பயனளிக்கும்படியான விண்வெளியில் இந்திய-ரஷிய ஒத்துழைப்பிற்கான ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை இருதரப்பும் வலியுறுத்தின. அளவீட்டுப் புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கான தரைத் தளத்தை இந்திய பிரதேச திசைவழி விண்கல செயல்முறை (நாவிக்) மற்றும் ரஷிய திசைவழி விண்கல செயல்முறை (க்ளாநாஸ்) ஆகியவற்றை பரஸ்பரம் ரஷிய கூட்டமைப்பு மற்றும் இந்திய குடியரசு ஆகியவற்றில் நிறுவுவதற்கான ஏற்பாட்டையும் இருதரப்பும் வரவேற்றன. மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத்திட்டங்கள், அறிவியல் திட்டங்கள் உள்ளிட்ட அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியைப் பயன்படுத்திக் கொள்வது, முழு அளவிலான ஆய்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. அதைப் போன்றே பிரிக்ஸ் அமைப்பின் தொலை தூர புலனறிதலுக்கான விண்கல தொடரை உருவாக்குவதிலும் தொடர்ந்து செயல்படுவதெனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
33. கூட்டு அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் ஆர்க்டிக் பகுதியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருதரப்பும் ஆர்வம் தெரிவித்தன. அண்டார்ட்டிக் பகுதியில் இந்திய- ரஷிய விஞ்ஞானிகளிடையே நீண்ட நாட்களாக இருந்துவரும் ஒத்துழைப்பு குறித்தும் இருதரப்பும் திருப்தி தெரிவித்தன.
34. பல்கலைக்கழகங்களுக்கான இந்திய-ரஷிய வலைப்பின்னலின் செயல்பாட்டின் விளைவாக இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையேயான தொடர்புகள் மேலும் விரிவடைந்துள்ளது குறித்தும் இரு தரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன. 2015-ம் ஆண்டு துவங்கப்பட்டபிறகு இந்த அமைப்பு மூன்று முறை கூடியுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையும் இப்போது 42-ஐ எட்டியுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம் அதைப்போன்றே கூட்டு அறிவியல் மற்றும் கல்வி திட்டங்கள் ஆகியவை கல்வி ரீதியான பரிமாற்றங்களிலும் இருதரப்பும் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தின.
எரிசக்தி
35. இயற்கை எரிவாயு உள்ளிட்டு ரஷியாவின் எரிசக்தி ஆதாரங்களில் இந்தியத் தரப்பிற்கு உள்ள ஆர்வத்தையும், மறுசுழற்சிக்கான எரிசக்தி ஆதாரங்கள் துறையில் கூட்டு திட்டங்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட வகையில் இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே எரிசக்தி குறித்த ஒத்துழைப்பினை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பும் எடுத்துரைத்தன.
36. எரிசக்தி துறை இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய தன்மையுள்ள நிலையை இருதரப்பும் அங்கீகரித்தன. மேலும் நீண்ட கால ஒப்பந்தங்கள், கூட்டு முயற்சிகள், இரு நாடுகளிலும் உள்ள எரிசக்தி ஆதாரங்களை கையகப்படுத்தல், மூன்றாவது நாடுகளிலும் இத்தகைய ஒத்துழைப்பை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை தங்கள் நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்கம் தர வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
37. ரஷியாவிலுள்ள வாங்கோர்நெஃப்ட், டாஸ் யுர்யாநெஃப்ட் எகாஸோடோபிச்சா ஆகியவற்றில் இந்திய கூட்டுச் சங்கத்தின் முதலீடுகள், அதைப் போன்றே இந்தியாவின் எஸ்ஸார் ஆயில் மூலதனத்தில் பிஜேஎஸ்சி ரோஸ்நெஃப்ட் எண்ணெய் நிறுவனத்தின் பங்கேற்பு ஆகியவை உள்ளிட்டு இந்திய-ரஷிய எரிசக்தி நிறுவனங்களுக்கிடையே இருந்து வரும் ஒத்துழைப்பையும் இருதரப்பும் வரவேற்றன. முழுமையான ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பதில் இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு இருதரப்பும் திருப்தி தெரிவித்ததோடு, வாங்கோர் தொகுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தன.
38. திரவ வடிவிலான இயற்கை எரிவாயுத் துறையில் ஒத்துழைப்பு குறித்து ரஷிய -இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதையும் இருதரப்பும் ஏற்றுக் கொண்டன. காஸ்ர்பாம் குழுமம் மற்றும் கெய்ல் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுக்கிடையே நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் திரவ வடிவிலான இயற்கை எரிவாயு வழங்கல் துவங்கியுள்ளதையும் அவை வரவேற்றன.
39. பிஜேஎஸ்சி நோவாடெக் நிறுவனத்திற்கும் இந்தியாவிலுள்ள எரிசக்தி நிறுவனங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து விரிவடைவதிலும் திரவ வடிவிலான இயற்கை வாயுத் துறையில் ஒத்துழைப்பு மேம்படுவதிலும் தங்களது ஆதரவை அவை தெரிவித்துக் கொண்டன.
40. ரஷிய ஆர்க்டிக் பகுதி, பெச்சோரா மற்றும் ஒகோட்ஸ்க் கடற்பகுதிகளில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்டு ரஷியா எண்ணெய் வளப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வாய்ப்புகளைக் கண்டறியவும் இரு தரப்பையும் சேர்ந்த நிறுவனங்களின் முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை இருதரப்பும் தெரிவித்துக் கொண்டன.
41. ரஷியா மற்றும் இதர நாடுகளிலிருந்து எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய்ப் பாதைகள் குறித்து 2017-ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஆய்வினை இருதரப்பும் வரவேற்றன. இந்தியாவிற்கு எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்ப் பாதைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து (எண்ணெய்) நிறுவனங்களுக்கும் இந்திய-ருஷ்ய அமைச்சகங்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின. இந்த இரு அமைச்சகங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்ய தொடர்ந்து விவாதிப்பது எனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
42. இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையேயான பொது அணுசக்திக்கான கூட்டுறவு என்பது கேந்திரமான பங்களிப்பின் முக்கிய அம்சமாகும் என்பதோடு அது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கும் பங்களிப்பதாகவும் பருவநிலை மாற்றம் மீதான பாரீஸ் உடன்படிக்கையின் கீழான அதன் உறுதிமொழிகளுக்கு உகந்ததாகவும் அமைகிறது. கூடங்குளம் அணுசக்தி நிலையத்தில் மீதமுள்ள ஆறு உலைகளை கட்டுவதிலும், உள்நாட்டிலேயே அதற்கான துணைக்கருவிகளை உற்பத்தி செய்வதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின. ரஷியா வடிவமைப்பில் இந்தியாவில் புதிய அணுசக்தி நிலையம் அமைப்பது, அணுசக்திக் கருவிகளை கூட்டாக உற்பத்தி செய்வது, மூன்றாவது நாடுகளில் பரஸ்பரம் இது குறித்து ஒத்துழைப்பது ஆகியவை குறித்த கலந்துரையாடல்களையும் இருதரப்பும் வரவேற்றன.
வங்கதேசத்தில் ரூபூர் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்துவதில் முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இருதரப்பும் சுட்டிக் காட்டின. கூட்டாக கண்டறிந்த அணுசக்தி தளத்தில் ஒத்துழைப்பிற்கான பகுதிகளை அமலாக்குவது, முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றுக்கான செயல்திட்டத்தில் கையெழுத்திடுவது குறித்தும் இருதரப்பும் திருப்தி தெரிவித்தன.
43. பருவநிலை மாற்றத்தில் பாதகமான விளைவுகளை குறைப்பது உள்ளிட்ட நீர் மின், மறுசுழற்சி மின் ஆதாரங்கள், மின்சார செயல்திறன் ஆகியவற்றில் நெருங்கிய ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை கண்டறிய முனைவது என்றும் இருதரப்பும் முடிவு செய்தன.
ராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு
44. இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவம், ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பது தங்கள் கூட்டணியின் மிக முக்கியமான தூண் என்பதை இருதரப்பும் சுட்டிக் காட்டின. 2018 டிசம்பரில் நடைபெறவுள்ள இந்திய-ரஷிய அமைச்சகங்களுக்கு இடையிலான ஆணையத்தின் ராணுவ- தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த கூட்டத்தை இருதரப்பும் வரவேற்றன. ராணுவரீதியான ஒத்துழைப்பிற்கான பாதை என்பது பயிற்சி, ராணுவங்களின் மூத்த அதிகாரிகளுக்கிடையேயான கலந்துரையாடல், அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள், பயிற்சிகள் உள்ளிட்ட இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே மேலும் தீவிரமான ஒன்றிணைந்த செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும். 2018 ராணுவ விளையாட்டுகள், 2018 ராணுவம், சர்வதேச பாதுகாப்பிற்கான மாஸ்கோ மாநாடு ஆகியவற்றின் இந்தியாவின் பங்கேற்பையும் ரஷியத் தரப்பு சாதகமான வகையில் மதிப்பீடு செய்தது. இந்த்ரா 2018 என்ற முத்தரப்பு ராணுவங்களின் பயிற்சி என்ற முதல் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவுற்றதை இருதரப்பு பாராட்டியதோடு, 2018-ல் இந்த்ரா கடற்படை, இந்த்ரா ராணுவப்படை, அவியா இந்த்ரா ஆகிய கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடர்வது எனவும் உறுதிபூண்டன.
45. இந்தியாவிற்கு தரையிலிருந்து விண்ணுக்கு செலுத்தும் தொலைதூர எஸ்-400 ரக ஏவுகணை வரிசையை வழங்குவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதையும் இருதரப்பு வரவேற்றன.
பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர பயன்கள் என்ற நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையேயான ராணுவ, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது என இருதரப்பும் உறுதிபூண்டன. ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்தும் இருதரப்பும் திருப்தி தெரிவித்தன. இந்த இருநாடுகளுக்கும் இடையே ராணுவ தொழில்நுட்ப கருவிகளை கூட்டாக ஆய்வு செய்வது, கூட்டாக உற்பத்தி செய்வது ஆகியவை குறித்த சாதகமான மாற்றத்தையும் அவை அங்கீகரித்தன. இந்திய அரசின் ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற கொள்கையை வளர்த்தெடுக்க ராணுவ தொழில் மாநாடு என்ற செயல்முறை மிக முக்கியமானதொரு வடிவமாக இருக்குமெனவும் அவை பெருமளவிற்கு மதிப்பீடு செய்தன.
2017 நவம்பரில் உருவாக்கப்பட்ட உயரிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டம் குறித்தும் இருதரப்பும் சாதகமான வகையில் மதிப்பீடு செய்தன. இந்தக் கூட்டம் பரஸ்பர நலன்களைக் கொண்ட துறைகளில் கூட்டு ஆய்வு, கூட்டான மேம்பாடு ஆகியவற்றுக்கான திட்டங்களை கண்டறிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமக்கு அளிக்கப்பட்ட உபசரிப்புக்காக இந்தியக் குடியரசின் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துக் கொண்டார். 2019ல் நடைபெறும் 20வது ஆண்டு உச்சி மாநாட்டிற்கு ரஷியாவுக்கு வருமாறு திரு. நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
Human resource development से लेकर natural resources तक,
— PMO India (@PMOIndia) October 5, 2018
trade से लेकर investment तक,
नाभिकीय ऊर्जा के शान्तिपूर्ण सहयोग से लेकर सौर ऊर्जा तक,
technology से लेकर tiger कन्ज़र्वेशन तक,
सागर से लेकर अंन्तरिक्ष तक,
भारत और रूस के सम्बन्धों का और भी विशाल विस्तार होगा: PM
आतंकवाद के विरूद्ध संघर्ष, अफगानिस्तान तथा Indo Pacific के घटनाक्रम, जलवायु परिवर्तन, SCO, BRICS जैसे संगठनों एवं G20 तथा ASEAN जैसे संगठनों में सहयोग करने में हमारे दोनों देशों के साझा हित हैं।
— PMO India (@PMOIndia) October 5, 2018
हम अंतरराष्ट्रीय संस्थानों में अपने लाभप्रद सहयोग को जारी रखने पर सहमत हुए हैं: PM
भारत- रूस मैत्री अपने आप में अनूठी है।
— PMO India (@PMOIndia) October 5, 2018
इस विशिष्ट रिश्ते के लिए President Putin की प्रतिबद्धता से इन संबंधों को और भी ऊर्जा मिलेगी।
और हमारे बीच प्रगाढ़ मैत्री और सुदृढ़ होगी और हमारी Special and Privileged Strategic Partnership को नई बुलंदियां प्राप्त होंगी: PM
Addressing a joint press meet with President Putin. Watch. @KremlinRussia_E https://t.co/Ybc7EU67AF
— Narendra Modi (@narendramodi) October 5, 2018
Here is my speech at the business summit with President Putin. https://t.co/VCS5uDyUF3
— Narendra Modi (@narendramodi) October 5, 2018
President Putin has played a vital role in further enhancing the friendship between India and Russia.
— Narendra Modi (@narendramodi) October 5, 2018
We had fruitful talks today, covering various aspects of the Special and Privileged Strategic Partnership between our nations. @KremlinRussia_E pic.twitter.com/395yFKeGzt