மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட் தொடர்பாக முன்வைத்த கீழ்கண்ட சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. (i) ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து விடுவது (ii) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை பிப்ரவரி மாத கடைசி தேதியிலிருந்து பிப்ரவரி மாத முதல் தேதிக்கு மாற்றியமைத்தல் (iii) பட்ஜெட் மற்றும் கணக்குகளில் திட்டம் மற்றும் திட்டமல்லாத இனங்களை இணைத்துவிடுவது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2017/18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஒரே சமயத்தில் அமல்படுத்தப்படும்.
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தல்
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து விடுவதற்கான ஏற்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவை கீழ்கண்ட நிர்வாக நிதி ஏற்பாடுகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
(i) ரயில்வே தொடர்ந்து தனது தனித்துவத்தை பராமரிக்கும், அதாவது தற்போதுள்ளபடி அரசுத்துறையால் இயக்கப்படும் வர்த்தக நிறுவனமாக தொடரும்.
(ii) ரயில்வேத்துறை தனது செயல்நிலை சுய அதிகாரத்தையும், நிதி அதிகாரப் பகிர்வையும் தொடர்ந்து தற்போதுள்ள நெறிகளின்படி தன்வசம் கொண்டிருக்கும்.
(iii) தற்போதைய நிதி ஏற்பாடுகள் அப்படியே தொடரும். இதன்படி ரயில்வேக்கள் சாதாரண நடைமுறை செலவினங்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய் செலவினங்களையும், ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றையும் தனது வருவாய்க் கணக்கிலிருந்து சந்திக்கும்.
(iv) ரயில்வேக்களின் வசமுள்ள மதிப்பிடப்பட்டுள்ள மூலதனமான ரூ.2.27 லட்சம் கோடி அகற்றப்படும். இதனையடுத்து 2017/18 முதல் ரயில்வேக்கு லாப ஈவுப்பங்கு பொறுப்பு ஏதும் இராது. ரயில்வே அமைச்சகம் மொத்த பட்ஜெட் ஆதரவைப் பெறும். இதனையடுத்து ரயில்வேக்களுக்கு இதுவரை இந்திய அரசுக்கு செலுத்தி வந்த ஆண்டு லாப ஈவுப் பங்குத் தொகை சுமார் ரூ.9,700 கோடி மிச்சமாகும்.
ரயில்வேக்கு தனியாக பட்ஜெட் சமர்ப்பிப்பது 1924ஆம் ஆண்டு தொடங்கியது. நாடு சுதந்திரமடைந்த பிறகும், அரசியல் சட்டப்படி அல்லாமல் மரப்புப்படி அந்த முறை தொடர்ந்தது.
பட்ஜெட்டுகள் இணைப்பு காரணமாக கீழ்கண்ட நன்மைகள் விளையும்.
• ஒன்றிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் ரயில்வே விஷயம் மத்திய நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், அரசுக்கு நிதிநிலைமை குறித்து முழுமையான கருத்து கிடைக்கிறது.
• பட்ஜெட் இணைப்பு நடைமுறைத் தேவைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திட்டங்களை கொண்டுச் சேர்த்தல் மற்றும் நல்ல நிர்வாக அம்சங்களுக்கு முக்கிய கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. ¬¬
• இந்த இணைப்பை அடுத்து ரயில்வேக்களுக்கான ஒதுக்கீடுகள் முக்கிய ஒதுக்கீடு மசோதாவின் பகுதியாக அமையும்.
பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்தல்
பட்ஜெட் தொடர்பான மற்றொரு சீர்திருத்தமான அதனை முன்கூட்டியே தாக்கல் செய்வது என்ற திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி கடைசி தேதிக்குப் பதிலாக அந்த மாத்த்தில் வசதியான வேறொரு தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், 2017/18 ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சரியான தேதி மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் தேதிகளை பொறுத்து முடிவு செய்யப்படும்.
இதனால் கீழ்கண்ட நன்மைகள் விளையும்
• பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஒருமாதம் முன்கூட்டியே அமைந்தால் பட்ஜெட் தொடர்பான சட்ட அலுவல்கள் மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாகவே முடிவடைந்து பட்ஜெட் சுற்று முன்கூட்டியே முடிவடைவதற்கு வழிவகுக்கும். இதனால், அமைச்சகங்களும், துறைகளும் நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து திட்டங்களை செயல்படுத்த இயலும். முதலாவது காலிறுதி ஆண்டிலேயே முழு வேலைப் பருவத்தையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
• இந்த நடவடிக்கையால் ஒதுக்கீடுகளை செலவின ஒப்புதல நடவடிக்கை மூலம் கோரும் அவசியம் நீக்கப்படுகிறது. இதனையடுத்து வரிதொடர்பான சட்ட மாற்றங்களை செயல்படுத்த முடியும். மேலும் நிதியாண்டின் தொடக்கத்திலேயே புதிய வரி நடைமுறை சட்டங்களை கொண்டுவர முடியும்.
திட்டம் மற்றும் திட்டமல்லாத இனங்களை பட்ஜெட் மற்றும் கணக்குகளில் இணைத்து விடுவது
201718 ஆண்டில் பட்ஜெட் மற்றும் கணக்குகளில் திட்டம் மற்றும் திட்டமில்லாத இனங்கள் இணைப்பது தொடர்பாக அமைச்சரவையில் மூன்றாவது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், ஷெட்யூல்ட் வகுப்பு துணைத் திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு தொடரும். இதேபோல, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுககீடுகளும் தொடரும்.
இதனையடுத்து கீழ்கண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.
• நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதில் துண்டு துண்டான கருத்துக்களுக்கு திட்டம், திட்டமில்லாத என்ற பிரிவினை வழிவகுத்தது. இதனால், சேவைகளை வழங்குவதற்கான செலவினத்தை தனித்தனியாக காண்பது கடினமாவதுடன், திட்டங்களும், திட்ட விளைவுகளும் ஒன்றாகிவிடுகின்றன.
• மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் திட்டச் செலவினங்களுக்கு ஆதரவான சிந்தனையும், செயல்பாடும் மிக அத்தியாவசியமான செலவினத்திற்கு கவனம் குறைந்து விடுவதில் முடிகிறது. இதனால், சொத்துக்கள் பராமரிப்பு, இதர நிறுவனங்கள் பராமரிப்பு, அத்தியாவசிய சமூக சேவை செலவினங்களுக்கு நிதி வழங்குவது போன்றவற்றில் கவனம் குறைந்துவிடுகிறது.
• இந்த இரண்டு செலவினத்தையும் இணைப்பதால் வருவாய் மற்றும் மூலதனச் செலவினம் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தும் பட்ஜெட் கட்டமைப்புக்கு போதுமான கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.