Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரயில்வே துறை ஒத்துழைப்புக்கு இந்திய ரயில்வே அமைச்சகம் ஐரோப்பிய ஆணையத்தின் பொதுப் போக்குவரத்து இயக்ககம் இடையேயான நிர்வாக ஏற்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே துறையில் நவீனத் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்திய ரயில்வே அமைச்சகம் – ஐரோப்பிய ஆணையத்தின் பொதுப் போக்குவரத்து இயக்ககம் இடையேயான நிர்வாக ஏற்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

     இந்த உடன்பாடு செப்டம்பர் 3, 2019 அன்று கையெழுத்தானது. இதன்படி, ஒத்துழைப்புக்கான சில துறைகள் வருமாறு:

     ரயில்வே பாதுகாப்பு

     சிக்னல் கட்டுப்பாட்டு முறைகள்

     ரயில் போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு வலைப்பின்னல்கள்

     புதிய கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் மயம்

     சர்வதேச ரயில்வே மாநாடுகள் மற்றும் அமைப்புகளின் அனுபவப் பகிர்வு

     பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் அம்சங்கள் உள்ளிட்ட ரயில்வேயின் நீடித்தக் கொள்கைகள்