ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், 11,72,240 ரயில்வே ஊழியர்களுக்கு 2028.57 கோடி ரூபாய்க்கு 78 நாட்கள் போனஸ் வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (காவலர்கள்), நிலைய அதிபர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அமைச்சக ஊழியர்கள் மற்றும் பிற பிரிவு சி ஊழியர்கள் போன்ற பல்வேறு பிரிவினருக்கு இந்தத் தொகை வழங்கப்படும். இந்த போனஸ் தொகை ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்த பணியாற்ற ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் ஊக்கத்தொகையாக செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை / தசரா விடுமுறைக்கு முன்னர் தகுதியான ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அரசிதழ் பதிவு பெறாத சுமார் 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு தகுதியான ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக 78 நாட்களுக்கு ரூ.17,951/- வழங்கப்படும். ரயில்வே ஊழியர்களான தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (காவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அமைச்சக ஊழியர்கள் மற்றும் பிற பிரிவு ‘சி ஊழியர்கள்’ போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு மேற்கண்ட தொகை வழங்கப்படும்.
2023-2024 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1588 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி சாதனை படைத்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 6.7 பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061667
***
(Release ID: 2061667)
BR/RR/KR