Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ்


ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனசை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உற்பத்தியுடன் இணைந்த போனஸ் குறித்த முக்கியமான அம்சங்களை அமைச்சரவை ஆராய்ந்து அனுமதி அளித்துள்ளது.
அவை கீழ்க்கண்டவாறு:

A. இந்த ஆண்டுக்கான மொத்த உற்பத்தி ஒரு கிலோமீட்டருக்கு உள்ள டன் கணக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

i) கிலோமீட்டருக்கு டன் அளவுக்கு ஏற்றியதால் கிடைத்த வருமானம்.

ii) புறநகர் பகுதிகளில் பயணிக்காத பயணிகளின் மொத்த கிலோமீட்டர் அளவு 0.076 என்ற எண்ணால் பெருக்கப்படும்.

iii) புறநகர் பகுதிகளில் பயணிப்பவர்களின் தூரம் 0.053 என்ற எண்ணால் பெருக்கப்படும்.

B. அரசிதழில் பதிவு பெறாத ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு ( ரயில்வே காவல் படை / ரயில்வே காவல் பாதுகாப்பு படை தவிர்த்து ) அதிகரிப்பது அல்லது குறைவது. மூலதனம் என்பது ரயில்களில் கொண்டு செல்லும் பொருட்கள் பயன்படுத்தப்படுவது. இதில் ரயில்களில் 0.50 பெட்டிகளின் திறன் 0.20 இருக்கை திறன் 0.30 என்ற அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தொழிலாளர்களின் திறனும் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.

2010-11, 2011-12, 2012-13 மற்றும் 2013-14 ஆகிய நிதியாண்டுகளில் 78 நாள் ஊதியம் உற்பத்தியுடன் போனஸாக உயர்ந்த அளவு வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டிலும் அதுபோல உற்பத்தியுடன் இணைந்த போனசாக 78 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். நிதிநிலைமை நல்ல நிலைமையில் இருப்பதாலும், ஊழியர்களை ஊக்குவிக்கவும் இதனால் பயன் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியுடன் இணைந்த போனஸ் 78 நாட்கள் அளவுக்கு ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் 1030.02 கோடி ரூபாய் செலவு இந்த நிதியாண்டில் ஏற்படும். அரசிதழில் பதிவு பெறாத ஊழியர்களின் மாத வருமானம் 3,500 ரூபாய்க்கு மேல் பெறாமல் இருப்பவர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும். ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், உச்சவரம்பாக 8,975 ரூபாய் வழங்கப்படும்.

இந்த முடிவின் மூலம் சுமார் 12.58 லட்சம் அரசிதழில் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்

உற்பத்தியுடன் இணைந்த போனஸ் அரசிதழில் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே ஊழியர்கள் ( ரயில்வே காவல் படை / ரயில்வே காவல் பாதுகாப்பு படை தவிர்த்து ) பயனடைவார்கள்.

பின்னணி

உற்பத்தியுடன் இணைந்த போனஸ் 78 நாட்கள் ஊதியத்தை 2014-15 ஆம் நிதியாண்டுக்கு அளிக்கலாம் என்ற மத்திய ரயில்வே துறையின் ஆலோசனையை அடுத்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சரவை கூடி அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டது. இதன்மூலம் தகுதியான அரசிதழில் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் ( ரயில்வே காவல் படை / ரயில்வே காவல் பாதுகாப்பு படை தவிர்த்து ) பயனடைவார்கள்.

***