Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரமாகாந்த ரத் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற கவிஞரும், அறிஞருமான ரமாகாந்த ரத் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, திரு ராமகாந்த ரத்-தின் படைப்புகள், குறிப்பாக கவிதைகள், சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும் பரவலாக பிரபலமாக உள்ளன என்று கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

“ராமகாந்த ரத் அவர்கள் ஒரு திறமையான நிர்வாகியாகவும், அறிஞராகவும் தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டார். அவரது படைப்புகள், குறிப்பாக கவிதைகள், சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் பரவலாக பிரபலமாக உள்ளன. அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அபிமானிகளுடனும் உள்ளன. ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி (PM @narendramodi )”

—-

PLM/DL