Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“ரன் ஃபார் ரியோ” ஓட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார் நாட்டிற்கு உங்களின் முழு திறமையை அளியுங்கள்; வீரர்களிடம் பிரதமர் கோரிக்கை

புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் “ரன் ஃபார் ரியோ” நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு இந்திய வீரரும் தனது இடத்தை பிடிக்க கடினமாக உழைத்து உள்ளனர். ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், அவர்கள் கண்டிப்பாக தங்களின் முழு திறனை பயன்படுத்தவார்கள். உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மனதை இந்திய வீரர்கள் வென்று, இந்தியாவின் திறமையை உலகிற்கு உணர்த்துவார்கள் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தேசம் இப்போதே தன்னை தயார் செய்துக் கொள்ள வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து, ஒரு வீரராவது தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அங்குள்ள சூழலுக்கு பழகிக்கொள்ளும் வகையில், இம்முறை பங்குபெற உள்ள வீரர்களை முன்கூட்டியே அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். என்று பிரதமர் கூறினார்.

ஒலிம்பிக்சில் பங்கேற்க உள்ள அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பிரதமர், விளையாட்டு வாழ்கையின் தேவையாகும். அனைவரும் விளையாடுவோம், அனைவரும் ஒளிர்வோம் என்றார்.

ஒலிம்பிக்ஸ் சிற்றேட்டை வெளியிட்ட பிரதமர், “ரன் ஃபார் ரியோ” ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.