யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புகழ்பெற்ற கலாச்சார மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாச்சார மையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்குப் பதில் அளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட கலாசார மையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாச்சார மையம்’ என்று பெயர் சூட்டியதை வரவேற்கிறேன். இது தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக அமைந்துள்ளதுடன், இந்திய – இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாற்று, நாகரிக பிணைப்புகளுக்கு ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.”
*****
PLM/KV
Welcome the naming of the iconic Cultural Center in Jaffna built with Indian assistance, as ‘Thiruvalluvar Cultural Center’. In addition to paying homage to the great Thiruvalluvar, it is also a testament to the deep cultural, linguistic, historical and civilisational bonds… https://t.co/51DoyPt7el
— Narendra Modi (@narendramodi) January 18, 2025