Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மௌலானா ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை


மௌலானா ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அறிவின் அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்றும், இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

மௌலானா ஆசாத் பிறந்த நாளான இன்று நாம் அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அறிவின் அடையாளச் சின்னமாக இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பாகவும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவர் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளராகவும், ஆற்றல்மிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்தார். வளர்ந்த மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான அவரது தொலை நோக்குப் பார்வையால் நாம் உந்துதல் பெற்றுள்ளோம்”.

 

***

(Release ID: 2072255)

PKV/RR/KR