மோர்பி தொங்கு பால விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மோர்பி விபத்து நிகழ்ந்தது முதல், தற்போது வரை, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விபத்தின் அனைத்து அம்ச ங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் திரு நரேந்தி மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், அம்மாநில உள்துறை அமைச்சர் திரு ஹர்ஷ் சங்வி, அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்களுடன் குஜராத் மாநில உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும், மாநில பேரிடர் மேலாண்மை முகமையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
====
(Release ID: 1872471)
PKV/ES/RR