Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்னாத்தை பிரதமர் சந்தித்தார்

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்னாத்தை பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்னாத்தை 8 செப்டம்பர் 2023 அன்று சந்தித்தார்.  தில்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் ‘விருந்தினர் நாடாக’ பங்கேற்க மொரீஷியஸுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பிற்கு பிரதமர் ஜுக்நாத் நன்றி தெரிவித்தார். இந்திய தலைமைத்துவத்தின்  கீழ் ஜி 20 நாடுகளின் பல்வேறு பணிக்குழுக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டங்களில் மொரீஷியஸ் தீவிரமாக பங்கேற்றதை பிரதமர் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜீய  உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவுடன்,  ஜி 20 நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மறுஆய்வு செய்தனர். கடந்த ஆண்டில் இருதரப்பு பரிமாற்றங்களின் விரைவான வேகத்தை அவர்கள் குறிப்பிட்டனர், 30 க்கும் மேற்பட்ட தூதுக்குழு விஜயங்கள் மற்றும் 23 இருதரப்பு ஒப்பந்தங்கள்  கையெழுத்தானதை அவர்கள் சுட்டிக்காட்டினர். 

சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றிக்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் ஜக்நாத், விண்வெளித் துறையில் இரு தரப்பினருக்கும் இடையே மேலும் ஒத்துழைப்பை எதிர்நோக்கினார்.

—-

ANU/SM/PKV/KRS