Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரீஷியஸ் பிரதமரை சந்தித்தார் பிரதமர்

மொரீஷியஸ் பிரதமரை சந்தித்தார் பிரதமர்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மொரீஷியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் குமார் ஜக்நாத்தை சந்தித்தார். ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திரு ஜக்நாத் இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

“பிரதமர் @KumarJugnauth மற்றும் நானும் ஒரு நல்ல சந்திப்பை மேற்கொண்டோம். நமது நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆண்டு இந்தியா-மொரிஷியஸ் உறவுகளுக்கு ஒரு சிறப்பான ஆண்டு. உள்கட்டமைப்பு, ஃபின்டெக், கலாச்சாரம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். உலகளாவிய   தெற்கின் குரலை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கினேன்.”

—-

ANU/AD/PKV/KRS