Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற திரு. பிரவிந்த் குமார் ஜீக்னோத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து


 

மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக திரு. பிரவிந்த் குமார் ஜீக்னோத் பதவியேற்றதை அடுத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியமைக்காக  பிரதமர் மோடிக்கு பிரதமர் ஜீக்னோத் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் மொரீஷியஸ் தனித் இடையேயான காலத்தால் நிரூபிக்க்கப்பட்ட மற்றும்  தன்மை வாய்ந்த உறவினை வருங்காலத்தில் மேலும் வலுப்படுத்த தாங்கள்  உறுதியோடு இருப்பதை இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான நட்புறவினை மேலும் வலுப்படுத்த தனது பங்கினை முழு மனதோடு அளித்து வலிமையான தலைமைத்துவத்தை அளித்து தற்போது பதிவிக் காலம் முடிந்து செல்லும் பிரதமர் சர் அனிரூத் ஜீக்னோத்திற்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

******