Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொசாம்பிக் நாடாளுமன்றத்திற்கு பிரதமர் விஜயம் மாலுவானாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மொசாம்பிக் நாடாளுமன்றத்திற்கு பிரதமர் விஜயம் செய்ததுடன், மாலுவானாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று மாபுடோவில் உள்ள மொசாம்பிக் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். தேசிய சட்டப்பேரவையின் தலைவர் திரு. வெரோனிகா மாகாமோவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

மாலுவானாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவில் புதுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்திற்கும் பிரதமர் விஜயம் செய்தார்.

இந்த மையம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் வகுப்பறை பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஆலோசனைகள் போன்ற முக்கிய சேவைகளை அளித்து வருகிறது.

அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் மாணவர்கள் இந்த மையத்தில் பணிபுரியம் போது ஏற்படும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தினார். இந்திய கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களையும் அவர் சந்தித்தார்.

மாபுடோவில் இந்திய சமூகத்தினரிடையே கலந்துரையாடிய பிரதமர், புலம்பெயர்ந்த இந்தியர்களின் அடையாளத்தை வடிவமைத்த முதல் நாடு ஆப்பிரிக்கா தான் என்றார். கடந்த பல தலைமுறைகளாக இந்திய பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்காக அவர் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.