மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தன்சானியா, கென்யா நாடுகளுக்கு புரப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை வருமாறு.
“ஜூலை மாதம் 7 – ந் தேதி வியாழக்கிழமை நான் மொசாம்பிக் நாட்டில் இருப்பேன். ஒத்துழைப்பையும் பண்பாட்டு இணைப்புகளையும் அதிகரிப்பதே எனது இந்தப் பயணத்தின் நோக்கமாகும். நான் அதிபர் பிலிப்பி நியூசி – யை சந்தித்து அவருடன் விரிவான பேச்சுக்கள் நடத்த உள்ளேன்.
எனது மற்றொரு திட்டமாக தேசிய பேரவையின் தலைவர் திருமதி வெரோனிகா மெகாமோவை சந்தித்துப் பேச உள்ளேன். மேலும் மாலுவானாவில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பூங்காவைச் சென்று பார்த்து அங்கு மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளேன்.
அங்கு இந்திய சமுதாயத்தினரிடையே மிகச் சுருக்கமாக கலந்துரையாடவும் உள்ளேன்.
ஜூலை 7 – ந் தேதி மாலை தென் ஆப்பிரிக்கத் தலைநகர் ரிட்டோரியா சென்றடைவேன். ஆப்பரிக்கா முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியான அந்நாட்டுடன் நமது உறவுகள் ஆழமானது. வரலாற்றுப் பூர்வமானது. தென் ஆப்பிரிக்காவில் நான் பிரிட்டோரியா, ஜோகன்னஸ்பர்க், டர்பன், பீட்டர்மாரிட்ஸ்பர்க் ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுமிருக்கிறேன். மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது அந்த நாடு அவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் அதனால் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தையம் வரலாறு எடுத்துரைக்கிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு வழக்கறிஞராக வேலை தேடிச் சென்றார். இந்தியாவுக்குத் திரும்பி வரும்போது மனிதாபிமான நெறிகளுக்கு வலுவான குரல் கொடுப்பவராக இருந்து மனித குலத்தின் வரலாற்றையே மாற்றி அமைப்பவராக உருவெடுத்தார்.
மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் தங்கி இருந்த போது அவருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த போனிக்ஸ் குடியிருப்பு மற்றும் பீட்டர்மாரீஸ்பர்க் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் பெருமையைப் பெறுவேன். அனைவராலும் மடிபா என்று அன்புடன் அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவை நினைவு கூராமல் எந்த தென் ஆப்பிரிக்கப் பயணமும் முழுமையடையாது. தனது நாட்டையும் உலகத்தையும் மிகச் சிறந்த இடமாகவிட்டுச் சென்ற மனித வரலாற்றின் சின்னமான அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதற்காக நெல்சன் மண்டேலா நிறுவனத்துக்கும், ‘கான்ஸ்டிடியூசனல் ஹில்’ பகுதிக்கும் செல்ல இருக்கிறேன்.
எனது பயணத்தின் போது அதிபர் ஜூமாவைச் சந்தித்துப் பேச உள்ளேன். துணை அதிபர் திரு சிரில் ராமாபோசாவையும் நான் சந்திக்க உள்ளேன்.
பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக நான் இந்தியா – தென் ஆப்பிரிக்கா வர்த்தக்க் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறேன். இது தவிர டர்பன் முன்னாள் மாணவர்கள் கட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்பது, டர்பன் நகர மன்றத்தில் அந்த நகர மேயர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆகியவையும் எனது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்காவை தங்களது சொந்த இடமாக மதித்து பல ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் இந்திய நாட்டின் துடிப்புள்ள சமுதாயத்தினருக்கு அந்த நாடு வீடாக மாறி உள்ளது. ஜூலை மாதம் 8 – ந் தேதி ஜோகன்னஸ்பர்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவழியினரிடையே கலந்துரையாட இருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் உங்கள் கருத்துக்களை அளிக்கவும் நான் ஆற்ற உள்ள உரைகளுக்கு கருத்துக்களைச் சொல்லவும் என்னுடைய செயலியான நரேந்திர மோடி மொபைல் ஆப்-ல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஜூலை 10 – ந் தேதி ஞாயிற்றுக் கிழமை நான் தான்சானியாவுக்குச் செல்கிறேன். ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மதிப்பு மிகுந்த நட்பு நாடான தான்சானியாவுடன் ஆன உறவுகளுக்கு வேகமளிப்பதற்கு இந்த குறுகிய ஆனால் மிக முக்கியமான பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
அதிபர் டாக்டர் ஜான் மாகுஃபுலி-யுடன் விரிவான பேச்சுக்கள் நடத்த உள்ளேன். இந்தப் பேச்சுக்களின் போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தியா – தான்சானியா உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிப்போம். ஆப்பிரிக்காவில் இருந்து வந்து பயிற்சி பெற்ற கிராமப்புற மகளிர் சூரிய ஒளி மின்சாரப் பொறியாளர்கள் குழுவான ‘சோலார் மமா’ க்களைச் சந்திக்க உள்ளேன். இவர்களுக்கு இந்திய அரசு ஆதரவுடன் அவர்களது கிராமங்களில் வீடுகளில் சூரிய சக்தி ஒளிவிளக்குகளை அமைக்கவும் சூரிய சக்தி லாந்தர் விளக்குகளை தயாரித்து, நிறுவி, பயன்படுத்தி, பழுதுபார்க்க பயிற்சி அளிக்கப்பட்டது.
அங்குள்ள இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளேன்.
எனது கென்யா பயணத்தை ஜூலை 10 – ந் தேதி மாலை தொடங்குகிறேன். இந்தியா – கென்யா இடையேயான உறவுகள், காலத்தின் சோதனைகளை வென்றவை. நமது இரு நாடுகளும் வலுவான மக்கள் தொடர்புகளைக் கொண்டிருப்பவை. சென்ற நூற்றாண்டில் இரு நாடுகளும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடிய நாடுகள்.
அதிபர் உஹூறு கென்யாட்டாவுடனான எனது பேச்சுக்கள் எவ்வாறு இந்தியாவும் கென்யாவும் தங்களது இருதரப்பு ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்பது பற்றி அமையும். இந்தியாவுக்கும் கென்யாவுக்கும் இடையே சிறப்பான வர்த்தகம், வர்த்தக மற்றும் பண்பாட்டுப் பரிவர்த்தனை ஆகியவற்றை எதிர் நோக்கி உள்ளேன். இதில் பெருமளவுத் திறன் அடங்கியுள்ளது, நாங்கள் இருவரும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள உள்ளோம்.
கென்யா நாடெங்கும் பக்தியுடன் போற்றப்படும் மகாத்மா காந்திக்கு நைரோபியில் மலர் அஞ்சலி செலுத்தவிருக்கிறேன். ஆப்பிரிக்க கண்டத்தின் தலை சிறந்த அரசியல் தலைவரும் கென்யாவின் முதலாவது அதிபருமான இம்ஜி ஜோமோ கென்யாட்டா-வுக்கும் நான் அஞ்சலி செலுத்த உள்ளேன்.
கென்யாவுடனான நமது உறவுகளின் பொருளாதார அம்சம் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இந்தியா – கென்யா வர்த்தக அமைப்பு முக்கியமான அமைப்பு என்பதால் அதில் முனைப்புடன் பங்கேற்க உள்ளேன்.
நான் மிகவும் ஆர்வத்துடன் இணைய உத்தேசித்துள்ள மற்றொரு நிகழ்ச்சி நைரோபி பல்கலைக் கழகத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆகும்.
அந்நாட்டில் வாழும் இந்தியர்களுடன் நமது உறவுகளை வலுப்படுத்த அந்தச் சமுதாயத்தின் கூட்டத்தில் ஜூலை 10 – ந் தேதி நான் உரையாற்றுகிறேன். இப்பயணத்தின் போது பாரத்வாலா பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். நான் கலந்து கொள்ளும் மற்றொரு நிகழ்ச்சி ஆம்புலன்ஸ் வண்டிகளையும் பாபாட்ரான் மாதிரியையும் வழங்கும் நிகழ்ச்சி ஆகும்.
My Africa tour, aimed at enhancing ties between India & Africa will begin from Mozambique in a brief but key visit. https://t.co/LaOw7lk2fp
— Narendra Modi (@narendramodi) July 6, 2016
My programmes in South Africa will span across Pretoria, Johannesburg, Durban & Pietermaritzburg. Here are details. https://t.co/BTF9fpGRy6
— Narendra Modi (@narendramodi) July 6, 2016
In Tanzania I will hold talks with President Dr. John Magufuli, meet ‘Solar Mamas’ & interact with Indian community. https://t.co/gUqFNIr0Wz
— Narendra Modi (@narendramodi) July 6, 2016
Talks with President @UKenyatta, deliberations on economic & people-to-people ties will be focus of my Kenya visit. https://t.co/PGtDaEWKUU
— Narendra Modi (@narendramodi) July 6, 2016
Inviting you to share ideas via the Mobile App for my speeches at the community programmes in Johannesburg & Nairobi https://t.co/TYuxNO0R6P
— Narendra Modi (@narendramodi) 6 July 2016