Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேம்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்: பிரதமர்


முன்னாள் படைவீரர்களுக்கான நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

முன்னாள் படைவீரர்களின் நலனுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை மற்றும் எளிமையான வாழ்க்கைக் கொள்கையின் அடிப்படையில், முன்னாள் படைவீரர்களின் கீழ்க்காணும் நலத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 

1. முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கான தொழிற்பயிற்சி மானியம் ரூ.20,000 முதல் ரூ.50,000 ஆகா உயர்வு.

2. ஓய்வூதியம் பெறாத முன்னாள் படை வீரர்கள்/ விதவைகளின் மருத்துவ மானியம் ரூ.30,000 முதல் ரூ.50,000 ஆக அதிகரிப்பு.

3. அனைத்து பொறுப்புகளில் உள்ள ஓய்வூதியம் பெறாத முன்னாள் படை வீரர்கள்/ விதவைகளுக்கு தீவிர நோய்களுக்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

இதற்கு பதிலளித்து பிரதமர்  வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

“நமது தேசத்தைப் பாதுகாத்த வீரமிக்க முன்னாள் ராணுவ வீரர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களுக்கான நலத்திட்டங்கள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தும்.”

**************  

ANU/AP/RB/DL